» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாஜக கூட்டணி தமாகா வேட்பாளர் எஸ்டிஆர் விஜயசீலன் வாக்குசேகரிப்பு!!

ஞாயிறு 31, மார்ச் 2024 12:55:33 PM (IST)



தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் பாஜக கூட்டணி தமாகா வேட்பாளர் எஸ்டிஆர் விஜயசீலன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் எஸ்டிஆர் விஜய் சீலன் போட்டியிடுகிறார். இதை முன்னிட்டு தேர்தல் காரியாலயத்தை தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா கட்சி துணைத் தலைவர் சசிகலா புஷ்பா, மற்றும் ஓபிஎஸ் அணி மாணவர் மாவட்ட செயலாளர் ஏசாதுரை ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் தூத்துக்குடி சிவன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து விட்டு தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் எஸ்டிஆர் விஜயசீலன் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். தொடர்ந்து தூத்துக்குடி நகரின் முக்கிய ரீதியாக சென்று பொது மக்களிடம் வாக்குகள் சேகரித்தார். 

நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் சித்ராங்கதன், ஓபிசி அணிமாநில துணைத் தலைவரும் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளருமான விவேகம் ரமேஷ், மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தேசிய செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சந்தனகுமார், பொதுக்குழு உறுப்பினர் விஎஸ்ஆர் பிரபு, மாவட்ட செயலாளர் உமரி சத்தியசீலன், மாவட்ட துணைத் தலைவர்கள் வழக்கறிஞர் எஸ்பி வாரியார், சுவைதர், கிழக்கு மண்டல தலைவர் ராஜேஷ் கனி, மகளிர் அணி உஷா தேவி, அமுமுக மாவட்ட செயலாளர் டேனியல் வில்சன், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சின்னதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

TUTOCORIN MAKKALMar 31, 2024 - 04:38:04 PM | Posted IP 172.7*****

தூத்துக்குடியில் பிஜேபி க்கு SEAT கொடுத்து , சசிகலா புஷ்பா / PPMT பொன் குமரன் / இராதகிருஷ்ணன் (வாழவல்லான்) இவர்களில் ஒருவருக்கு கொடுத்தால் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது......

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory