» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மீண்டும் கனிமொழி போட்டி : திமுக வேட்பாளர்கள் பட்டியல்!
புதன் 20, மார்ச் 2024 10:53:02 AM (IST)
தூத்துக்குடியில் மீண்டும் கனிமொழி போட்டியிடுகிறார். திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியலை திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். அதன்படி, தூத்துக்குடியில் மீண்டும் கனிமொழி போட்டியிடுகிறார். மேலும், மத்திய சென்னையில் தயாநிதி மாறன், வடசென்னையில் கலாநிதி வீராசாமி, தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன், ஸ்ரீபெரும்புதூரில் சி.ஆர். பாலு, அரக்கோணத்தில் ஜகத் ரட்சகனும், வேலூரில் கதிர் ஆனந்த், திருவண்ணாமலையில் அண்ணாதுரை, சேலத்தில் செல்வகணபதி, ஈரோட்டில் ரமேஷ் போட்டியிடுகின்றனர்.
புதிய வேட்பாளர்களாக 11 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர். 3 பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வேட்பாளர்கள் பட்டியலில் 6 வழக்கறிஞர்கள், 2 முனைவர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும் 2 மருத்துவர்கள், 19 பட்டதாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
வாரிசுகள் அடிப்படையில் பார்த்தால் அமைச்சர் நேருவின் மகன் அருண் நேரு பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். வேலூர் தொகுதியில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த்துக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள், தவிர கனிமொழி, கலாநிதி வீராசாமி, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளனர்.
தஞ்சையில் ஆறு முறை எம்.பி.யாக இருந்த எஸ்.எஸ். பழனி மாணிக்கத்துக்கும், தருமபுரி தொகுதி எம்.பி. செந்தில் குமார், சேலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பார்த்திபன் ஆகியோருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.
மக்கள் கருத்து
NameMar 20, 2024 - 12:33:57 PM | Posted IP 162.1*****
5 varusam munnad yepad irunthucho athe mathiei thana innum irukuthu yenna mari irukuthu
makkalMar 21, 2024 - 03:15:01 PM | Posted IP 172.7*****