» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மேயராக 3-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஜெகன் பெரியசாமிக்கு பாராட்டுக்கள் குவிகிறது!

திங்கள் 4, மார்ச் 2024 4:23:12 PM (IST)தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்று 3ம் ஆண்டு துவங்கியுள்ள நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்திய அளவில் வளர்ந்து வரும் மாநகராட்சியாக தூத்துக்குடி மாநகராட்சி விளங்கி வருகிறது. துறைமுகம், விமானநிலையம், அனல்மின்நிலையம், மற்றும் பல்வேறு தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டத்தின் தலைநகராக தூத்துக்குடி இருந்து வருகிறது. இதனால் மாநகராட்சியை சர்வதேச தரத்துடன் கொண்டு செல்லக்கூடிய மேயர் அமைந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். 

அந்த வகையில் தூத்துக்குடிக்கு கிடைத்த நல்முத்து ஜெகன்பெரியசாமி. தூத்துக்குடி மாநகராட்சி மேயராக பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் 3ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் ஜெகன் பெரியசாமி. இவரது சாதனைகளை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. மிக மிக சவாலான பணிகளை திறம்பட செய்து மக்கள் மனதில் தனி முத்திரை பதித்து வருகிறார்.

குறிப்பாக, முதலாம் ஆண்டில், கொரானா இரண்டாம் அலையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட காலகட்டத்தில், சுகாதார பணிகளை முறையாக கையாண்டும், பல்வேறு உதவிகளை செய்தும் மக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டார்.

இரண்டாம் ஆண்டின் கடைசியில், எதிர்பாராத அதிகனமழையால் தூத்துக்குடியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பொதுமக்களை சொல்லுன்னா துயரத்திற்கு ஆளாக்கியது. இதை பெரும் சவாலாக ஏற்ற ஜெகன் பெரியசாமி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க இரவு-பகல் பாராது உழைத்தார். அன்றைய காலகட்டத்தில் எம்.பி, அமைச்சர்கள், உயர்அதிகாரிகள் முன்னின்று உற்சாகப்படுத்தியதன் காரணமாக பொதுமக்களை மீட்டு, அவர்களுக்கு நிவாரணபொருட்களை வழங்கி, மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றார்.

இந்நிலையில், மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையிலான மாமன்ற உறுப்பினர்கள் செய்த சாதனைகளுக்கு பல்வேறு தரப்பினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த ஆண்டு தான் வரலாற்றுச் சுவடுகளில் முத்திரை பதிக்கும் ஆண்டாக அமையவிருக்கிறது. இவர்கள் செய்த பணிகளுக்கு விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் களமிறங்கும் கனிமொழி எம்.பி. அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று எல்லோரும் பேசி வருகின்றனர். இவர்களின் உழைப்பு, பணியாற்றிய விதத்திற்கு மக்கள் மன்றத்தில் அளிக்கப்பட இருக்கின்ற தீர்ப்பு தான் இவர்களுக்கு அங்கீகாரம் கொடுத்து முத்திரை பதிக்கும் நாள், இவர்களுக்கு திருநாளாக அமையும்.

தூத்துக்குடி மாநகர வளர்ச்சிக்கு அயராது பணியாற்றி வரும் மேயர் ஜெகன் பெரியசாமியை மாநகராட்சி மேயர் அலுவலகத்தில் வைத்து மாநகராட்சி பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், மண்டல தலைவர் நிர்மல்ராஜ், கவுன்சிலர்கள் முத்துவேல், பட்சிராஜ், ஜெயசீலி, பவானி மார்ஷல், வைதேகி, சுப்புலெட்சுமி, பகுதி செயலாளர் ரவீந்திரன், தூத்துக்குடி மூத்த பத்திரிகையாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.


மக்கள் கருத்து

SARAVANANMar 6, 2024 - 03:52:52 PM | Posted IP 172.7*****

அவர் மனசுக்கு எல்லாம் அவர் மூன்று வருஷம் என்ன முந்நூறு வருஷம் கொண்டாடலாம். தங்கமான மனுஷன்

ராஜா தூத்துக்குடிMar 5, 2024 - 11:01:51 PM | Posted IP 172.7*****

சிறப்பான மக்கள் பணிகள் தொடர்ந்து நடை பெறவாழ்த்துக்கள்

KANNAN DMEMar 5, 2024 - 10:42:35 AM | Posted IP 172.7*****

GOD BLESS YOU..

அந்தோணி சாமிMar 4, 2024 - 06:08:57 PM | Posted IP 172.7*****

உங்கள் சேவை தொடர என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

ManoMar 4, 2024 - 05:44:53 PM | Posted IP 172.7*****

Congrats Mayor. More uphill tasks on the way in the upcoming 2 yrs of ur tenure. It's crucial for the suburbs like Mappillaiyoorani and Korampallam panchayats which are to be annexed with Corporation.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital


Thoothukudi Business Directory