» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திராவிட மாடல் அரசு மகளிருக்கான அரசு: கனிமொழி எம்.பி., பெருமிதம்!

சனி 24, பிப்ரவரி 2024 12:45:42 PM (IST)



நாடாளுமன்ற தேர்தல் குறித்து தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில், திமுக மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
 
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி திமுக மகளிர் அணி சார்பில் 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து மாபெரும் ஆலோசனை கூட்டம் அபிராமி மகள் திருமண மண்டபத்தில் நடந்தது. திமுக வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் கீதா ஜீவன் தலைமை தாங்கினார்.  கூட்டத்தில் கனிமொழி எம்பி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். 

கூட்டத்தில் அவர் பேசுகையில், "திராவிட மாடல் அரசு மகளிருக்கான அரசு. புதுமைப் பெண் திட்டம், மகளிர் உரிமைத் தொகை, பேருந்தில் இலவச பயணம் போன்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் கோடிக்க ணக்கான மகளிர் பயன்பெறுகிறார்கள். ஆனால், மத்திய பாஜக அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. 

தமிழக அரசுக்கு கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி தொகையை கொடுக்க மறுக்கிறது. வெள்ள நிவாரணமாக ஒரு பைசா கூட வழங்கவில்லை. இதே நிலை தொடர்ந்தால் நல்ல திட்டங்களை தொடர்வதில் சிரமம் ஏற்படும். ஓட்டு கேட்டு வரும் பாஜகவினரிடம் எங்களுடைய காசு எங்கே என்று கேட்க வேண்டும். பாஜக மத அரசியல் செய்து வருகிறார். அதிமுக, பாஜக ஒன்றுதான். நாட்டின் தலையெழுத்தை மாற்றவேண்டிய பொறுப்பு உங்கள் கையில்தான் உள்ளது. 

நிகழ்ச்சியில், மாநகரசெயலாளர் ஆனந்த சேகரன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தேவி, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ராமலட்சுமி ஆகியோர் முன்னிலை வைத்தனர். மாநகர தொண்டரணி அமைப்பாளர் ஜெயக்கனி வரவேற்புரை ஆற்றினார் முடிவில் ஜெயசீலி நன்றி கூறினார்.


மக்கள் கருத்து

அதுFeb 26, 2024 - 09:36:29 PM | Posted IP 162.1*****

கட்டுமரம் குடும்பத்திற்காக அரசு

யப்பாFeb 24, 2024 - 06:08:45 PM | Posted IP 162.1*****

இளம் விதவையா ?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory