» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இயந்திரத்தில் சிக்கி கை விரல்கள் துண்டிப்பு : மாநகராட்சி பணியாளருக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை!

செவ்வாய் 13, பிப்ரவரி 2024 3:04:59 PM (IST)



தூத்துக்குடி மாநகராட்சியில் குப்பை அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி கை விரல்கள் துண்டிக்கப்பட்ட தூய்மைப் பணியாளருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஆதித்தமிழர் பேரவையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட செல்வநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் குருவம்மாள். இவர் மாநகராட்சியில் ஒப்பந்த பணியாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 8ம் தேதி  மாநகராட்சி வடக்கு மண்டலம் பகுதியில் மக்கும் குப்பை அரைக்கும் இயந்திரத்தில் பணி செய்து வந்த போது எதிர்பாராத விதமாக அவரின் கை இயந்திரத்தில் சிக்கியது.  

உடனடியாக அங்கிருந்தவர்கள் குருவம்மாளை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரது கை விரல்கள் சேர்க்க முடியாத அளவிற்கு சிதைந்து உள்ளது என கூறி மதுரையில் உள்ள  மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டார். அங்கு அவரது கைகளில் 5 விரல்களும் துண்டிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரியிடம் கேட்ட போது "தொடர்ந்து அவருக்கு தேவையான மருத்துவ உதவிகள் மாநகராட்சி சார்பாக செய்யபட்டுள்ளதாக  தெரிவித்தனர்‌. மேலும் பாதிக்கபட்ட குருவம்மாள்  குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் இழப்பீடு தொகையும் வழங்க வேண்டும் என்று ஆதித்தமிழர் பேரவை சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து

தோழர் கு.சோழன்Feb 14, 2024 - 01:52:11 PM | Posted IP 172.7*****

பாதிக்கப்பட்ட குருவம்மாள் அவர்களுக்கு அல்லது அவர் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory