» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நெகிழியை ஒழிப்போம்! - சமூக ஆர்வலரின் பைக் பயணத்திற்கு தூத்துக்குடியில் வரவேற்பு!
செவ்வாய் 13, பிப்ரவரி 2024 10:34:26 AM (IST)
"நெகிழியை ஒழிப்போம், இயற்கையை பாதுகாப்போம்" சமூக ஆர்வலரின் விழிப்புணர்வு பயணத்திற்கு தூத்துக்குடியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
"நெகிழியை ஒழிப்போம்.. இயற்கையை பாதுகாப்போம்..." என்று வலியுறுத்தி நாகர்கோவிலைச் சேர்ந்த நேதாஜி நற்பணி இயக்கம் தலைவர் எஸ்.சந்தோஷ், கன்னியாகுமரி முதல் ராமேஸ்வரம் வரை இருசக்கர வாகன விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த விழிப்புணர்வு பயணம் நேற்று தூத்துக்குடி வருகை தந்தது. அவரை மாணவ, மாணவிகள் வரவேற்று வழியனுப்பி வைத்தனா். இந்நிகழ்ச்சியில் தூய இஞ்ஞாசியாா் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிாியா் ஜேசுஅந்தோணி, ஆசிாியா் ராஜகுமாா் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.