» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையராக மதுபாலன் ஐ.ஏ.எஸ்., நியமனம்!

ஞாயிறு 11, பிப்ரவரி 2024 2:41:13 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் பணி இடமாற்றம் செய்யப்பட்டு புதிய ஆணையராக மதுபாலன் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் மதுரை மாநகராட்சி ஆணையராக பணி இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக மதுரை மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தலைமைத்து பிறப்பித்துள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள மதுபாலன் 2018ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றவர்.  ஐஏஎஸ் தேர்வில் நாட்டிலேயே 71வது இடத்தைப் பிடித்தார். எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பட்டம் தேர்ச்சி பெற்றவர். 28வயதிலேயே மதுரை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டவர். கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியராக பணியாற்றியவர். பணிபுரிந்த இடங்களில் பணியில் சிறப்பாக பணியாற்றியவர் என்ற பெயரெடுத்தவர். 

இவரை பொதுமக்கள் அதிகாரிகள் எப்போது வேண்டுமானாலும் அவர் பணிபுரிந்த இடங்களில் சந்திக்கலாம் என்ற தகவலும் உள்ளது. அதுபோல மதுரை மாநகராட்சியில் ஆணையராக பணிபுரிந்த போது பணிகள் நடைபெறுகின்ற இடங்களுக்கு திடீரென்று சென்று ஆய்வு பணியை மேற்கொள்வார்.  பணிகளை சரிவர செய்யாத பல ஒப்பந்தக்காரர்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதாகவும் தெரிகிறது.


மக்கள் கருத்து

ManikandanFeb 13, 2024 - 04:41:48 PM | Posted IP 172.7*****

வந்தவாசி நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் எவ்வளவு என்று தெரியவில்லை ஐயா 🙏😭

v umavenkateshwari, P & T colony 8th street, Near EBEN school, Tuticorin _8Feb 12, 2024 - 10:29:47 AM | Posted IP 172.7*****

Sir, Tuticorin, P T colony 8th street, Near EBEN school road is very bad conditions. In this connection so many on line request and manual petitions have been sent for kind action. But hitherto no action were taken on the above request. I request that please make arrangements for early sanction to provide new bitumen road to Tuticorin, P&T colony 8th street, Near EBEN school taking into consideration of school going children going on the way. Thanks

P.S. RajFeb 11, 2024 - 11:17:55 PM | Posted IP 172.7*****

வாழ்த்துக்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

அரசு பஸ் மோதி கல்லூரி காவலாளி பலி!

திங்கள் 22, ஜூலை 2024 12:52:09 PM (IST)

Sponsored Ads
Arputham Hospital


Thoothukudi Business Directory