» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் செல்போன் திருடியவர் கைது!

ஞாயிறு 11, பிப்ரவரி 2024 11:52:13 AM (IST)

தூத்துக்குடியில் செல்போனை திருடியவரை போலீசார் கைது செய்து, திருடப்பட்ட ரூ.21ஆயிரம் மதிப்புள்ள செல்போனை மீட்டனர்.

தூத்துக்குடி கிருபை நகரை சேர்ந்த ஆல்வின் ஞானபிரகாசம் மகன் பிரின்ஸ் ஸ்டாலின் (42) என்பவர் கடந்த 9ஆம் தேதி அன்று தனது இரு சக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங் கவரில் தனது செல்போனை வைத்துவிட்டு வீட்டின் முன் வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். பின்னர் வந்து பார்க்கும்பொழுது அவர் இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த அவரது செல்போன் திருடு போயுள்ளது.

 இதுகுறித்து பிரின்ஸ் ஸ்டாலின் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி சத்யா நகரை சேர்ந்த பொன்ராஜ் மகன் ஜெகன்ராஜ் (20) என்பவர் பிரின்ஸ் ஸ்டாலினின் செல்போனை திருடி சென்றது தெரியவந்தது. உடனே தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்து ஜெகன்ராஜை கைது அவரிடம் இருந்து திருடப்பட்ட ரூ.21ஆயிரம் மதிப்புள்ள செல்போனையும் பறிமுதல் செய்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital
Thoothukudi Business Directory