» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மிகப்பெரிய சேதத்தை தடுத்த மூவருக்கு பொதுமக்கள் பாராட்டு!

வெள்ளி 22, டிசம்பர் 2023 8:40:19 PM (IST)



தண்டவாளம் பாதிக்கப்பட்ட பகுதியை கண்டறிந்து மிகப்பெரிய சேதத்தை தடுத்த தண்டவாள பராமரிப்பாளர்கள் மூவருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ந் தேதி பெய்த அதிகனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாமிரபரணி ஆற்று வெள்ளம், பல்வேறு பாலங்களை மூழ்கடித்தபடி பாய்ந்தோடியது. நெல்லை-திருச்செந்தூர் இடையே பல்வேறு இடங்களில் ரயில் தண்டவாளங்கள் வெள்ளத்தால் அரிக்கப்பட்டு, அந்தரத்தில் தொங்கியது.

திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில், செய்துங்கநல்லூர் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட அரிப்பு காரணமாக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் சுமார் 800 பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

இதனிடையே அதிகன மழையில் தண்டவாளத்தில் ஆய்வு செய்து வெள்ளம் அரித்து தண்டவாளம் பாதிக்கப்பட்ட பகுதியை கண்டறிந்து செந்தூர் வண்டியை நிறுத்த முதற் காரணமான தண்டவாள பராமரிப்பாளர்கள் செல்வகுமார், கிருஷ்ண பெருமாள், விக்னேஷ் ஆகியோருக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Arputham Hospital







Thoothukudi Business Directory