» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் திமுக வழக்கறிஞர் அணி சார்பாக இந்திய அரசியலமைப்பு பவள விழா!
செவ்வாய் 26, நவம்பர் 2024 12:45:08 PM (IST)
தூத்துக்குடியில் திமுக வழக்கறிஞர் அணி சார்பாக இந்திய அரசியலமைப்பு பவள விழாவை முன்னிட்டு அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரை வாசிப்பு நிகழ்வு நடைபெற்றது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பாக தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தின் முன்பு அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டு 75வது ஆண்டு பவள விழா கொண்டாடும் விதமாக அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரை வாசிப்பு நிகழ்வு நடைபெற்றது.
இதில் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குபேர இளம்பருதி, மாநகர அமைப்பாளர் ரூபஸ் அமிர்தராஜ், மாநகர தலைவர் வக்கீல் வி.நாகராஜன் பாபு, மாநகரத் துணை அமைப்பாளர்கள் ரூபராஜா, மணிகண்டன், திலக், அஜித், பாலசுப்பிரமணியன், ஜேசுராஜ் தயான், என் எஸ் கே கிறிஸ்டோபர், ஜெய்லானி மரைக்காயர், சதீஷ், ராஜா, முருகன், ரமேஷ், மரிய தாமஸ், திலீபன்,செல்வ லட்சுமி, அமிர்த வள்ளி, மாலாதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.