» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இந்திய அரசியலமைப்பு தினம்: மேயர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு!

செவ்வாய் 26, நவம்பர் 2024 12:50:52 PM (IST)



இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்திய அரசமைப்பு சட்டம் 26 நவம்பர் 1945 ஆம் ஆண்டு நமக்கு நாமே இயற்றி ஏற்றுக் கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவு கூறும் விதமாக இன்று மாநகராட்சி மத்திய அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் இணை ஆணையர் ராஜாராம், உதவி ஆணையர் வேங்கட்ராமன், கண்காணிப்பாளர் சுப்பிரமணியன், கவுன்சிலர் பட்சிராஜ், முன்னாள் கவுன்சிலரும், வட்ட செயலாருமான ரவிந்திரன், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி மற்றும் பிரபாகர், ஜேஸ்பர் உட்பட அரசுத்துறை அலுவலர்கள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





New Shape Tailors

Arputham Hospital



Thoothukudi Business Directory