» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாட்டுப்படகு மீனவர்களுக்கு மிரட்டல்: ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

திங்கள் 20, நவம்பர் 2023 3:20:55 PM (IST)



தூத்துக்குடியில் நாட்டுப்படகு மீனவர்களுக்கு மிரட்டல் விடுத்து தொழில் செய்யவிடாமல் தடுப்பதாக ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக புனித சந்தியாகப்பர் நாட்டுபடகு மீனவர் நலச்சங்கம் சார்பில் நிர்வாகிகள் ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனு: எங்கள் சங்கத்தைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் கடந்த 18.11.2023 அன்று அதிகாலை 5 மணிக்கு மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். அவர்களை திரேஸ்புரத்தைச் சேர்ந்த 4 நாட்டுப்படகில் வந்த 20 மீனவர்கள் வழிமறித்து பாரம்பரிய மீனவர்களாகிய எங்களுக்குத்தான் உரிமை உள்ளது. 

வந்தேரிகளான உங்களுக்கு உரிமைபில்லை என்று மிரட்டி தொழில் செய்ய விடாமல் விரட்டி விட்டனர். இவர்கள் சொன்ன இந்த கடின வார்த்தைகளை எங்கள் சங்கத்தில் முறையீடும் போது எங்கள் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும், ஆக்ரோஷத்தையும் ஏற்படுத்துவதோடு மிகுந்த மன உள்ளச்சலையும் ஏற்படுத்துகிறது.

இதனால் ஜாதி ரீதியிலான மோதல் போக்கு ஏற்படும் சூழ்நிலையை மேற்கண்ட 20 பேர்களால் உருவாக்கப்படுகிறது. இந்த ஜாதி மோதல்களை தவிர்க்கும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் தலையிட்டு இரு தரப்பினரையும் அழைத்து சுமூக தீர்வு ஏற்படுத்தி, பிரச்சினைகள் ஏதுமின்றி எங்கள் சங்கத்தைச் சேர்ந்த மீனவர்கள் தொழில் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து

LawrenceNov 20, 2023 - 03:43:22 PM | Posted IP 172.7*****

ஜாதி மோதல்களை தவிர்க்க நல்ல கோரிக்கை.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory