» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசு மருத்துவமனைக்கு திமுக சார்பில் வாஷிங் மெஷின் நன்கொடையாக வழங்கல்!

திங்கள் 18, செப்டம்பர் 2023 3:27:25 PM (IST)கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு திமுக சார்பில் வாஷிங் மெஷின் நன்கொடையாக வழங்கப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுபவர்கள் கட்டில் பெட்ஷீட் துணிகள் தினந்தோறும் சுத்தப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு வசதியாக துணிகளை தூய்மைப்படுத்துவதற்காக கோவில்பட்டி நகர திமுக சார்பில் புதியதாக நவீன வாஷிங் மெஷின் உபயமாக அளிக்கப்பட்டுள்ளது. 

இதன் செயல்பாடு தொடக்க விழா இன்று அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் கோவில்பட்டி நகர் மன்ற தலைவரும் திமுக நகர செயலாளருமான கருணாநிதி கலந்து கொண்டு வாஷிங் மெஷின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார். இதில் மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital
Thoothukudi Business Directory