» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி கடற்கரையில் தூய்மை பணி: மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு!

ஞாயிறு 17, செப்டம்பர் 2023 10:00:50 AM (IST)தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில்  தூய்மை பணி நடைபெற்றது. 

உலகம் முழுவதும் செப்டம்பர் மாதம் 3-வது சனிக்கிழமை சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தேசிய பசுமை படை மூலமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள 14 கடற்கரை மாவட்டங்களில் உள்ள கடற்கரைகள் தூய்மைப்படுத்தப்படுகிறது.

அதன்படி தூத்துக்குடி விவேகானந்தர் காலனி,இனிகோ நகர், திரேஸ்புரம் ஆகிய கடற்கரை பகுதியில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில், மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் தினேஷ்குமார் முன்னிலையில் தூய்மைப் பணி நடைபெற்றது. இதில், மாநகராட்சி தூய்மை காவலர்கள், காமராஜ் கல்லூரி, தூய மரியன்னை ஹோலி கிராஸ் அறிவியல் கல்லூரியைச்  சேர்ந்த மாணவ - மாணவிகள் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதில், நூறு டன் அளவிலான குப்பைகள் அகற்றப்பட்டது.ப்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அக்.18ல் காளி வேட ஊர்வலம்!

வெள்ளி 29, செப்டம்பர் 2023 5:46:08 PM (IST)

Sponsored AdsArputham Hospital

Thoothukudi Business Directory