» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அகில இந்திய ஹாக்கி போட்டி : புது தில்லி அணிகள் அரையிறுதிக்குத் தகுதி
வெள்ளி 26, மே 2023 7:54:38 AM (IST)

கோவில்பட்டியில் நடைபெறும் அகில இந்திய ஹாக்கி போட்டியின் அரையிறுதிக்கு புதுதில்லி பஞ்சாப் தேசிய வங்கி, புதுதில்லி கம்ப்ட்ரோலா் மற்றும் ஆடிட்டா் ஜெனரல் ஆஃப் இந்தியா, புதுதில்லி பெட்ரோலியம் விளையாட்டு ஊக்குவிப்பு அணிகள் முன்னேறியுள்ளன.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று காலையில் நடைபெற்ற காலிறுதி முதல் ஆட்டத்தில் புதுதில்லி பஞ்சாப் தேசிய வங்கி அணியும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணியும் மோதின. இதில் இரு அணிகளும் தலா 2 கோல் போட்டு சமநிலை அடைந்தன.
அதைத் தொடா்ந்து ஷூட்-அவுட் முறையில் 4 - 3 என்ற கோல் கணக்கில் புதுதில்லி பஞ்சாப் தேசிய வங்கி அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. மாலை 5 மணிக்கு நடைபெற்ற மற்றொரு காலிறுதி போட்டியில் புதுதில்லி கம்ப்ட்ரோலா் மற்றும் ஆடிட்டா் ஜெனரல் ஆஃப் இந்தியா அணியும் சென்னை இந்தியன் ஓவா்சீஸ் வங்கி அணியும் மோதின. இதில் 4 - 3 என்ற கோல் கணக்கில் புதுதில்லி அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
தொடா்ந்து நடைபெற்ற மற்றொரு காலிறுதி போட்டியில் புதுதில்லி பெட்ரோலியம் விளையாட்டு ஊக்குவிப்பு அணியும் பெங்களூா் கனரா வங்கி அணியும் மோதின. இதில் 4 - 0 என்ற கோல் கணக்கில் புதுதில்லி அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. பின்னா் நடைபெற்ற மற்றொரு காலிறுதி போட்டியில் செகந்திராபாத் தென் மத்திய ரயில்வே அணியும் சென்னை மத்திய கலால் துறை அணியும் மோதின.சனிக்கிழமை (மே 27) மாலை அரையிறுதிப் போட்டிகள் நடைபெறும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி பாலாஜி சரவணன் பங்கேற்பு!!
புதன் 31, மே 2023 4:07:25 PM (IST)

தூத்துக்குடியில் கலைஞரின் நூற்றாண்டு விழா : அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!
புதன் 31, மே 2023 3:36:55 PM (IST)

தூத்துக்குடி பேருந்து பணிமனைக்கு கலைஞர் பெயர் : மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
புதன் 31, மே 2023 3:18:28 PM (IST)

மேலூர் ரயில் நிலையம் அருகில் புதியசாலை : அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!
புதன் 31, மே 2023 2:43:46 PM (IST)

மது கடைகளை மூடக் கோரி உடுக்கை அடித்து தமிழ் மாநில காங்கிரஸ் நூதன போராட்டம்!
புதன் 31, மே 2023 12:52:14 PM (IST)

மனைவியை கத்தியால் குத்திய கணவர் : மது குடிக்க பணம் தர மறுத்ததால் வெறிச்செயல்!
புதன் 31, மே 2023 12:28:31 PM (IST)
