» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மூவேந்தர்களின் வம்சாவழியினர் நாடார்கள்: ஆதாரமான ஓலைச்சுவடி கண்டுபிடிப்பு!!

வெள்ளி 26, மே 2023 7:51:56 AM (IST)

மூவேந்தர்களின் வம்சாவழியினர் நாடார்கள் என்பதற்கு ஆதாரமான ஓலைச்சுவடி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடியியல் துறை பேராசிரியர் சு.தாமரைப்பாண்டியன் கூறினார்.

உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடியியல் துறை பேராசிரியர் சு.தாமரைப்பாண்டியன் கூறியதாவது: 19-ம் நூற்றாண்டில் பதிப்பிக்கப்பட்ட ஓலைச்சுவடிகள் வழியாகத்தான் தமிழரின் பழம்பெருமை உலகுக்குத் தெரிந்தது. இதனால் ஓலைச்சுவடிகளை தேடி தொகுத்து பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரியை சேர்ந்த தவசிமுத்துமாறன் என்பவரிடம் இருந்து 14 அரிய ஓலைச்சுவடிகள் கிடைத்தன.

அதில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த "ஆதி பூர்வீக மண்டல் காட்டு ராசாவாகிய மூலப்புலிக்கொடியோன் பூர்வீக வரலாறு" எனும் ஓலைச்சுவடியும் கிடைத்து உள்ளது. அந்த சுவடியில் காலம் மற்றும் நூலை இயற்றிய ஆசிரியர் பற்றிய குறிப்புகள் எதுவும் காணப்படவில்லை. ஆனாலும் பிரதி ஓலைச்சுவடியின் பழமை வடிவ நிலை அடிப்படையில் சுவடி எழுதப்பட்டது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது. மூலச்சுவடியின் காலம் அதற்கும் முந்தையது என்பதில் ஐயம் இல்லை. எனினும் நூலில் உள்ள வரலாறுகள் நடைபெற்ற காலம் 11-ம் நூற்றாண்டு முதல் 18-ம் நூற்றாண்டு வரையிலானது ஆகும்.

இந்த சுவடியில் மூவேந்தர்களின் வழித்தோன்றல்கள் நாடார்கள் என்பதை உறுதிபடுத்தும் வகையிலான கருத்துகள் உள்ளன. சோழர் குல வலங்கை சான்றோர் மக்களின் தோற்றவரலாறு இந்த சுவடியின் முதல் பகுதியில் கூறப்பட்டு உள்ளது. இந்த சுவடி புலிக்கொடியோனின் வம்சாவழியினரின் வரலாற்றை சுருக்கமாகக் கூறுகிறது. இந்த நூலை இயற்றியவர் வித்துவான் ச.செந்தமிழ்ச்செல்வன் என்பதை அறிய முடிகிறது. கிடைத்துள்ள சுவடி சோழர் வரலாற்றுடன் தொடர்புடையது என்பதால் வரலாற்று முக்கியத்துவமானதாக அமைந்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

History Studentமே 31, 2023 - 02:19:42 PM | Posted IP 162.1*****

Dai History padi da 19 nootrandu sollura... Mooventharkal athuku munnadi valthavanga... And Nadar history iruku.... Avanga Channar nu sollu vanga... Avangala thaaltha pattavangalathaan... History iruku... Tamilnadu history padi da poi😂 summa ethavathu olara kudathu... 19 .. 100 year la Muventharkal ilavey ila da... Mutta payathan itha nambuvaan

பாரதிமே 29, 2023 - 08:26:28 AM | Posted IP 172.7*****

ஒரு பொய்யை தொடர்ந்து கூறினால் அது மெய் ஆகிவிடாது. முக்குலத்தோரின் வரலாற்று பாரம்பரியத்தை சிதைக்க எடுக்கப்படும முயற்சி உண்மையான வரலாற்றை பதிவு செய்யுங்கள்

Balance nadarமே 28, 2023 - 08:46:28 PM | Posted IP 172.7*****

Kalvettu irunthaal naam yar entru ulagukku theriyum.

நாங்கள்மே 28, 2023 - 03:33:57 PM | Posted IP 162.1*****

திருட்டு பரம்பரை அல்ல என்று மார் தட்டி கொள்வோம்...

ஜெயபிரகாஷ் ஜெமே 27, 2023 - 10:40:15 AM | Posted IP 172.7*****

உங்கள் அன்பே என் சமுதாயத்திற்கு மிகப்பெரிய ஒன்று ஏனென்றால் என்னை போன்ற நமது சமுதாய இளைஞர்களுக்கு பெரும்பாலான நமது சமுதாயத்தின் வரலாறு தெரிந்ததே இல்லை நாம் தான் மூவேந்தர்களின் வரி தோன்றவில்லை என்று கூட நாம அறிவதில்லை.உங்களைப் போன்றவருக்கு நாங்கள் எல்லோரும் நன்றி ஐயா கடமைப்பட்டுள்ளோம் நன்றி ஐயா.

RAMESH Sமே 27, 2023 - 09:51:15 AM | Posted IP 172.7*****

ஆறுமுகநேரி காரன் என்பதில் பெருமை கொள்கிறேன்

அய்யாமே 26, 2023 - 03:21:52 PM | Posted IP 162.1*****

நம்ம வரலாறு இப்போ வேண்டாம்... இனிமே வரலாறு எழுதுவோம்... நாடார்கள் இப்படி என்று... நம்ம வரலாறு எப்படி வேண்டுமானால் இருக்கட்டும்..

V.S.S. பிரதாபன் , வாணுபன்விளை மூலைப்பொழி குடும்பத்தின்3/8 பங்காளி.மே 26, 2023 - 02:24:00 PM | Posted IP 172.7*****

தாங்கள் பதிவு செய்துள்ள ஓலைசுவடி எங்கள் குடும்ப வரலாறு .கரையானுக்கு இறையானது போக மிஞ்சியது. எங்கள் தாத்தா திரு V.S.சண்முகதிரவியநாடார் ( முன்னாள் தலைவர் தக்ஷ்னமாற நாடார் சங்கம் , முன்னாள் உறுப்பினர் திருநெல்வேலி ஜில்லா போர்டு ) அவர்களின் பூட்டனார் வரை எழுதப்பட்டுள்ளது .எங்கள் குடும்பத்தின் மூத்த வாரிசான மூலைப்பொழி கிராமிசு நாடார் பெட்டகத்தில் இருந்தது .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital

Thoothukudi Business Directory