» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு: 2 சிறுவர்கள் உட்பட 5பேர் கைது

புதன் 22, மார்ச் 2023 7:24:56 PM (IST)

தூத்துக்குடியில் கடைகளில் பூட்டை உடைத்து பணம், செல்போனை திருடிச் சென்ற 2 சிறுவர்கள் உட்பட 5பேரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி டூவிபுரம் 10-வது தெருவை சேர்ந்தவர் பெருமாள் மகன் ராஜமுருகன் (35), இவர் மில்லர்புரம் கிழக்கு தெருவில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று ரூ.2ஆயிரம் பணத்தை திருடி சென்று விட்டனர். இதுபோல் தூத்துக்குடி அண்ணா நகர் 4வது தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் பலவேசம் (51) என்பவர் நடத்தி வரும் மெடிக்கல் கடையில் பூட்டை உடைத்து ரூ.2ஆயிரம் பணம், ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றையும் திருடி சென்று விட்டனர். 

இது குறித்து 2பேரும் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப் இன்ஸ்பெக்டர்கள் கெங்கநாத பாண்டியன், சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் 5பேர் சேர்ந்து இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக தூத்துக்குடி பெருமாள் புரத்தை சேர்ந்த நடராஜன் மகன் கருப்பசாமி (23), குமரி மாவட்டம் தெற்கு குண்டல் கிராமத்தை சேர்ந்த வினோத் (19), ஆறுமுகநேரி வடக்கு சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த பெருமாள் மகன் ஆகாஷ் (19) மற்றும் 2 இளம் சீரார்கள் ஆகிய 5பேரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து செல்போன் மற்றும் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து

ஆண்டMar 22, 2023 - 08:51:37 PM | Posted IP 162.1*****

பரம்பரை திருட்டு நாயா இருப்பான்...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory