» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
டி.சி.டபிள்யூ. சார்பில் உலக காடுகள் தினவிழா!
செவ்வாய் 21, மார்ச் 2023 7:45:25 PM (IST)

சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் சார்பில் உலக காடுகள் உலக தினவிழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழாநடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் சார்பில் உலக காடுகள் மற்றும் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மூத்த செயல் உதவித்தலைவர் பணியகம் சீனிவாசன் தலைமையில் சுமார் 50 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் ஆலை வளாகத்திற்குள் நடப்பட்டது. மூத்த மேலாளர் (சுற்றுச்சூழல்) ரவிக்குமார் குறுங்காடுகள் வளர்ப்பு மற்றும் காடுகளின் பங்களிப்பு பற்றி விழிப்புணர்வு உரையாற்றினார்.
நீர் இன்றி அமையாது உலகு என்பதை வலிறுத்தும் வண்ணமும், முறையாக நீரை பயன்படுத்தும் வழியிலும் விழிப்புணர்வு பதாகைகள் வழங்கப்பட்டது. அனைவராலும் தண்ணீரினை சிக்கனமாக பயன்படுத்த உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. விழாவில் மூத்த அலுவலர்கள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை சுற்றுச்சூழல் துறை, மக்கள் தொடர்பு மற்றும் சிவில் துறையினர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பைக் விபத்தில் நிதி நிறுவன அதிபர் பலி
சனி 3, ஜூன் 2023 3:47:18 PM (IST)

உச்சநீதிமன்ற நீதிபதி தூத்துக்குடி வருகை: ஆட்சியர் வரவேற்பு
சனி 3, ஜூன் 2023 3:36:33 PM (IST)

ஒடிசா இரயில் விபத்து: தூத்துக்குடியில் அஞ்சலி!
சனி 3, ஜூன் 2023 3:04:03 PM (IST)

அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை : ஆட்சியர் செந்தில்ராஜ் தகவல்
சனி 3, ஜூன் 2023 11:35:40 AM (IST)

கலைஞர் 100வது பிறந்தநாள் மரக்கன்றுகள் நடும் திட்டம்: மேயர் தொடங்கி ஜெகன் பெரியசாமி வைத்தார்!
சனி 3, ஜூன் 2023 11:23:56 AM (IST)

அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் மரணம்? போலீஸ் விசாரணை
சனி 3, ஜூன் 2023 11:02:02 AM (IST)
