» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தனியார் ஆலையில் நன்கொடை கேட்டு மிரட்டிய பாஜக நிர்வாகி கைது!

வெள்ளி 17, மார்ச் 2023 11:33:27 AM (IST)

சாத்தான்குளம் அருகே தனியார் ஆலையில் நன்கொடை கேட்டு மிரட்டியதாக பாஜக மாநில இளைஞரணி செயலாளர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள வேலவன் பகுதியில் தனியார் கிரஷர் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு நேற்று மாலை பாஜக மாநில இளைஞரணி செயலாளர் பூபதி உள்ளிட்டோர் சென்று நன்கொடை கேட்டார்களாம். அப்போது பணியில் இருந்த மேலாளர், கிரஷர் ஆலை நிறுவனர் தற்போது இல்லாததால் பிறகு வருமாறு கூறியுள்ளார். இதனை ஏற்க மறுத்த பாஜகவினர் கொலை மிரட்டல் விடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் கிரஷர் ஆலை முன்பாக தங்களது சொகுசு கார்கள் நிறுத்தி லாரிகளை வழிமறித்துள்ளனர். இதையடுத்து புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீசார் விசாரணை நடத்தி, பாஜக மாநில இளைஞரணி செயலாளர் பூபதியை கைது செய்து சொகுசு கார்களையும் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து

JAI HINDMar 17, 2023 - 03:24:26 PM | Posted IP 162.1*****

IS IT TRUE...FAKE NEWS. BJP IS ONLY DECENT POLITICAL PARTY......

ராஜாMar 17, 2023 - 01:18:14 PM | Posted IP 162.1*****

மகிழ்ச்சியா பள்ளி நேரத்தில் மழை

உள்ளMar 17, 2023 - 01:02:29 PM | Posted IP 162.1*****

வெச்சு புட்டத்தை கிழித்தால் சரி வரும்

இந்தியன்Mar 17, 2023 - 12:50:40 PM | Posted IP 162.1*****

இதே மாதிரி பிச்சைக்கார அரசியல்வாதிகளால் பாஜகக்கு அவமானம்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital


Thoothukudi Business Directory