» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொலை வழக்கு குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீசார் - தூத்துக்குடியில் பரபரப்பு!

ஞாயிறு 12, மார்ச் 2023 9:30:57 AM (IST)தூத்துக்குடியில் வழக்கறிஞர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால்  சுட்டு பிடித்தனர். 

தூத்துக்குடியில் வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் கடந்த மாதம் 22ம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயப்பிரகாஷை தட்டப்பாறை அருகே காட்டுப்பகுதியில், கைது செய்ய முயன்றபோது காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்ப முயன்றார். போலீசை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ஜெயப்பிரகாஷை போலீசார் சுட்டுப்பிடித்தனர். 

ஜெயப்பிரகாஷ் காலில் சுடப்பட்ட நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தனிப்படை உதவி ஆய்வாளர் ராஜபிரபு மற்றும் காவலர் சுடலைமணிக்கு இடது கையில் வெட்டு பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை எஸ்பி பாலாஜி சரவணன் சந்தித்து ஆறுதல் கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham HospitalThoothukudi Business Directory