» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பத்ரகாளி அம்மன் கோவிலில் கொடை விழா கால் நாட்டு விழா

புதன் 1, பிப்ரவரி 2023 10:36:33 AM (IST)

தூத்துக்குடி மேலூர் பத்ரகாளி அம்மன் கோவில் கொடை விழா கால் நாட்டு விழாவுடன் தொடங்கியது.

தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மேலூர் அருள்மிகு பத்ரகாளி அம்மன் கோவில் வருகிற 7ம் தேதி கொடை விழா நடைபெறுகிறது.  இதனை முன்னிட்டு நேற்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமத்துடன் பூஜைகள் பூஜைகள் நடைபெற்றன. அதன் பின்பு அம்மனுக்கு  சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. 

அதைத்தொடர்ந்து கோவில் முன்பு மஞ்சள், குங்குமம், சந்தனம், மாவிலை, புஷ்ப அலங்காரத்துடன் கூடிய 'கால்நாட்டு' விழா நடைபெற்றது. விழாவில் கொடை விழா குழு தலைவர் கீதா செல்வ மாரியப்பன், மாமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார், தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் இளைஞர் அணி குழு தலைவர் அறிவழகன், செயலாளர் கோபால் சக்திவேல், வழக்கறிஞர் செந்தில்குமரன், மாரிமுத்து, ராமச்சந்திரன் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory