» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்கள் விநியோகம் : ஆட்சியர் துவக்கி வைத்தார்!

திங்கள் 9, ஜனவரி 2023 10:23:02 AM (IST)தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்கள் விநியோகம் செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்  துவக்கி வைத்தார். 

தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் வருகிற 2023-ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 2,19,33,342 குடும்பங்கள் உள்ளிட்ட பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்கள் வழங்கிட தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 5,23,894 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.58 கோடி மதிப்பிலான பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட உள்ளது. தூத்துக்குடி போல்பேட்டை -1 நியாயவிலைக் கடையில் ரூ.1000 ரொக்கப்பணம்,  பச்சரிசி, சீனி, முழுக் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்கள் விநியோகத்தை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் பெ.ஜெகன் பெரியசாமி முன்னிலையில் துவக்கி வைத்தார். 

இந்நிகழ்வில் தூத்துக்குடி சார்ஆட்சியர் கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சிவ.முத்துக்குமாரசாமி, துணைப்பதிவாளாகள் ரவீந்திரன், மாரியப்பன், மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல் காசிம், கண்காணிப்பாளர் ஜோசில்வஸ்டர், கூட்டுறவு சார்பதிவாளர் சூரியா, தனிவட்டாட்சியர் ஜஸ்டின் செல்லதுரை, விற்பனை சங்க மேலாண்மை இயக்குநர் அந்தோணி பட்டுராஜ் மற்றும் கூட்டுறவு சங்க பணியாளர்கள் உடனிருந்தனர்.கோவில்பட்டி காந்தி நகரில் உள்ள நியாய விலை கடையில் தமிழக அரசின்  பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை நகர் மன்ற தலைவர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.  நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் கணேஷ் பாபு, பாண்டியம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital
Thoothukudi Business Directory