» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கால்வாய் கரையோரம் 7 அடி நீள மலைப் பாம்பு

சனி 3, டிசம்பர் 2022 8:25:13 AM (IST)

ஆத்தூா் அருகே கால்வாய் கரையோரம் கிடந்த  சுமாா் 7 அடி நீள மலைப் பாம்பு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூா் அருகே உள்ள மேலாத்தூா் கிராமத்தில் அங்குள்ள ஆத்தூரான் கால்வாய் கரையோரம் சுமாா் 7 அடி நீள மலைப் பாம்பு நேற்று முன்தினம் இரவு கிடந்தது. இரையை விழுங்கி நகர முடியாமல் கிடந்த பாம்பை இப்பகுதியைச் சோ்ந்த விவசாயி ராமன் லாவகமாகப் பிடித்து சாக்குப்பையில் அடைத்தாா். 

பின்பு வனத்துறை அலுவலா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  அவா்கள் வந்து பாம்பை எடுத்துச் சென்றனா். தாமிரபரணி ஆற்றில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மலைப் பாம்புகள், கரையோரங்களில் ஒதுங்கி இனப்பெருக்கம் செய்து பெருகி வருகின்றன. இதுவரை மனிதா்களை தொந்தரவு செய்யவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory