» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி கின்ஸ் அகடமியில் குரூப் 4 பயிற்சி வகுப்புகள் துவக்கம்!

செவ்வாய் 29, நவம்பர் 2022 3:50:13 PM (IST)



தூத்துக்குடி போல்பேட்டை கின்ஸ் அகடமியில் குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கியது.

தூத்துக்குடி போல்பேட்டையில் அமைந்துள்ள கின்ஸ் அகடமியில் அரசு பணிக்கான இலவச வகுப்புகள் கடந்த ஏழு ஆண்டுகளாக நடந்து வருகிறது. இங்கு பயிற்சியில் பயின்ற 500 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெற்றி பெற்று பல்வேறு அரசு பணியில் பணிபுரிந்து வருகின்றனர். தமிழக அரசின் காவலர் பணிக்கான தேர்வு தற்போது முடிவடைந்த நிலையில் நேற்று குரூப் 4 பணிக்கான வகுப்புகள் துவங்கப்பட்டன. ஆன்லைனிலும் நேரிலும் நடக்கும் இந்த வகுப்புகளில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற துவங்கி உள்ளனர். துவக்க விழா நிகழ்சியில் அகடமி நிறுவனர் எஸ். பேச்சிமுத்து வரவேற்று பேசினார். 

தமிழக அரசின் கைத்தறி துறை முதுநிலை ஆய்வாளர் டி. ரகு தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது, நேற்று தமிழக அரசின் போலீஸ் தேர்வு நடந்து முடிந்திருக்கிறது. அதை தொடர்ந்து இன்று குரூப் 4 வகுப்புகள் துவங்கி இருக்கின்றன. நடந்து முடிந்த குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளிவரும் முன்பே அடுத்த தேர்வுக்கான வகுப்புகள் இன்று துவங்கி இருக்கின்றன. இன்னும் சுமார் ஓராண்டு காலம் கழித்து நடக்க இருக்கும் தேர்வுக்கு இப்போதே படிக்க துவங்க வேண்டுமா என்று சிலர் நினைக்கலாம். போட்டிகள் மிகவும் அதிகரித்துள்ள இந்த நாட்களில் வெற்றிபெற வேண்டுமானால் முன்கூட்டியே படிக்க துவங்குவதுதான் சரியானதாக இருக்கும்.

இங்கு பயின்ற 50 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் குரூப் 2 முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்று தற்போது முதன்மை தேர்வுக்காக படித்து வருகிறார்கள். குரூப் 2 தேர்வுகளில் வெற்றி பெற்ற பல்வேறு அதிகாரிகளால் அவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு தேர்வுக்கும் 20 சதவீத அளவு என்ற விகித்தில் நீங்கள் உழைத்தால் ஒரு நாளும் வெற்றிபெற முடியாது என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அதாவது மொத்தமாக ஒரே நேரத்தில் நூறு சதவீதம் அளவுக்கு உழைக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும். 

அதற்கு இப்போதே நீங்கள் படிக்க துவங்குவதுதான் சரியானதாக இருக்கும். ஓராண்டு காலம் முழுவதும் நூறு சதவீத உழைப்பை கொடுத்தால் அடுத்த குரூப் 4 தேர்வில் நீங்கள் வெற்றி பெறுவது உறுதி. ஆகவே நீங்கள் அனைவரும் விடா முயற்சியோடு தொடர்ந்து படித்து வெற்றி பெற வாழ்த்துகள் என்றார். விழாவில் தமிழ் பேராசிரியை வாசுகி, வணிகவரித்துறை கே. கலையரசன், பள்ளி கல்வித்துறை ஆர். சிவகுருநாதன், எஸ். வினோத், கே. வித்யா உட்பட பல பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர். கின்ஸ் அகடமி மாணவியும் பயிற்றுனருமான எஸ். இலக்கியா நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory