» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மத்திய அரசின் எஸ்.எஸ்.சி. தேர்வுகளுக்கு இலவச பயிற்சி: வேலைவாய்ப்பு மையம் அழைப்பு
வெள்ளி 23, செப்டம்பர் 2022 5:15:57 PM (IST)
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) அறிவித்துள்ள போட்டித் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் வாயிலாக நடத்தப்படவுள்ளது.

26.09.2022 அன்று தொடங்கப்படவிருக்கும் இவ்வகுப்புகள் நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் திங்கள் முதல் வெள்ளி வரையான அலுவலக வேலைநாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இந்தப் பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரடியாக வருகை புரிந்து தன்னார்வ பயிலும் வட்டத்தில் உறுப்பினராகப் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மேலும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் அனைத்து விதமான போட்டித் தேர்வுகளுக்கான மென்பாடக்குறிப்புகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் வீட்டு மனைகளில் தண்ணீர் தேங்கினால் நடவடிக்கை : மேயர் ஜெகன் பெரியசாமி
வியாழன் 30, நவம்பர் 2023 1:12:45 PM (IST)

இளம்பெண் தற்கொலை: போலீஸ் விசாரணை
வியாழன் 30, நவம்பர் 2023 11:53:05 AM (IST)

திருச்செந்தூர் கோவிலில் அர்ச்சகர் பயிற்சி கூடாது : உயர் நீதிமன்றம் உத்தரவு
வியாழன் 30, நவம்பர் 2023 11:49:47 AM (IST)

தூத்துக்குடியில் பள்ளி ஆண்டு விழா: மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு
வியாழன் 30, நவம்பர் 2023 11:29:34 AM (IST)

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து வாலிபர் பலி
வியாழன் 30, நவம்பர் 2023 10:56:10 AM (IST)

வேளாண் திட்டத்திற்கு ரூ.34 கோடி கடன் வழங்க இலக்கு : ஆட்சியர் லட்சுமிபதி தகவல்!
வியாழன் 30, நவம்பர் 2023 10:38:42 AM (IST)
