» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் அக்.2ல் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் : பாஜக மாவட்ட தலைவர் அறிக்கை!

வியாழன் 22, செப்டம்பர் 2022 12:30:41 PM (IST)

தூத்துக்குடியில் வருகிற அக்.2ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற உள்ளது. 

இதுகுறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் சித்ராங்கதன் வெளியிட்டுள்ள அறிக்கை: வருகிற அக்.2ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 மணியளவில் தூத்துக்குடியிலும், ஸ்ரீவைகுண்டத்திலும் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு ஊர்வலம் (பத சஞ்சலன்) முழு சீருடையுடன் (பூரண கனவேஷ்) மிகச்சிறந்த முறையில் எழுச்சியோடு நடைபெற இருக்கிறது. 

ஊர்வலத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாநில, மாவட்ட, மண்டல் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், கிளைத் தலைவர்கள், கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் அவசியம் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். திருச்செந்தூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத்திற்கு உட்பட்ட அனைவரும் ஶ்ரீவைகுண்டத்திலும், தூத்துக்குடி சட்டமன்றத்திற்கு உட்பட்ட அனைவரும் தூத்துக்குடியிலும் கலந்து கொள்ள வேண்டும். ஊர்வலம் முடிவில் பொதுக்கூட்டம் நடைபெறும். அதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

ராமநாதபூபதிSep 24, 2022 - 04:52:32 PM | Posted IP 162.1*****

பொதுமக்கள் கலந்துகிடணுமா? எதுக்கு நாங்க வேலில போற ஓணானை வேட்டிக்குள்ளே விடப்போறோம்

அன்புSep 24, 2022 - 02:26:48 PM | Posted IP 172.7*****

பொதுங மக்கள் ஏன் கலக்கவும்.பெட்ரோல் டீசல் ககேஸ் விலையை குறைந்ததற்கு நன்றி கூறி நடைபயணமா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

Thoothukudi Business Directory