» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கடல்நீர் சாகச விளையாட்டுகள்: சுற்றுலா இயக்குநர் சந்தீப்நந்தூரி ஆய்வு!
வெள்ளி 24, ஜூன் 2022 3:53:19 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் கடல்நீர் சாகச விளையாட்டுகள் செயல்படுத்துவதற்கான இடங்களை தமிழ்நாடு சுற்றுலா இயக்குநர் சந்தீப் நந்தூரி, ஆய்வு மேற்கொண்டார்
சுற்றுலா துறை, கலை பண்பாடு மற்றும் இந்து அறநிலையத்துறை இயக்குநர் சந்திரமோகன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்து முள்ளக்காடு புதிய துறைமுக கடற்கரை பகுதி மற்றும் வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக பூங்கா கடற்கரைப் பகுதியில் கடல் நீர் சாகச விளையாட்டு மைதானங்கள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
அதனடிப்படையில் இன்று தமிழ்நாடு சுற்றுலா இயக்குநர் சந்தீப் நந்தூரி, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சரவணன், ஆகியோர்கள் முன்னிலையில் முள்ளக்காடு புதிய துறைமுக கடற்கரை பகுதி மற்றும் வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக பூங்கா கடற்கரைப் பகுதியில் கடல் நீர் சாகச விளையாட்டு செயல்படுத்துவதற்கான இடத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வில் மாவட்ட சுற்றுலா அலுவலர் சீனிவாசன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மதுரை மண்டல மேலாளர் டேவிட் பிரபாகர், உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வக்குமார், தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காதலித்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம்: விஷம் குடித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி சாவு!
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 8:45:17 PM (IST)

பாஞ்சாலங்குறிச்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 8:14:37 PM (IST)

குப்பையில் இருந்து தயாரிக்கப்படும் முத்துரம் உரம் : தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் அறிமுகம்!!
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 7:57:06 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் 17 போலீசார் மீது நடவடிக்கை : அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 7:41:03 PM (IST)

கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 5:45:27 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நிலம் மோசடி : வாலிபர் கைது!
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 5:15:09 PM (IST)
