» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு செல்லும் 1,000 மெட்ரிக் டன் அரிசி: தமிழக அரசு நடவடிக்கை

புதன் 18, மே 2022 3:21:06 PM (IST)

தூத்துக்குடி துறைமுகம் வழியாக இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் 1,000  மெட்ரிக் டன் அரிசி அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ரூ.80 கோடி மதிப்பில் 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி, ரூ.28 கோடி மதிப்பில் 50 மெட்ரிக் டன் பால் பவுடர், ரூ.28 கோடி மதிப்பில் 137 வகையான மருந்து பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அனுப்பப்படும் என சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து அரிசி, மருந்து உள்ளிட்ட பொருட்களை பொட்டலமிடும் பணிகள் நடைபெற்றன. இன்று மாலை சென்னை துறைமுகத்தில் இருந்து முதற்கட்டமாக அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. அதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மேலும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள இலங்கைக்காக நிதிகளை திரட்டும் பணிகளிலும் தமிழக அரசு ஈடுபட்டு உள்ளது.

இலங்கைக்கு சென்னை மற்றும் தூத்துக்குடியில் இருந்து தமிழக அரசு சார்பில் அத்தியாவசிய நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக பொருட்கள் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து வருகிற 24, 28 மற்றும் 31ந்தேதிகள் என 3 தவணைகளாக அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது.

இதையொட்டி மதுரை மாவட்டத்தில் இருந்து ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி சேகரிக்கப்பட்டுள்ளது. மதுரையை அடுத்த பனையூர், சிந்தாமணி ஆகிய பகுதிகளில் உள்ள 12 அரிசி ஆலைகளில் இருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் வாயிலாக இதற்கான பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இந்த அரிசிகளை இலங்கைக்கு அனுப்புவதற்காக பொட்டலமிடப்பட்டு அங்கிருந்து தூத்துக்குடிக்கு லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் தூத்துக்குடி துறைமுகம் வழியாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த 2 பேர் கைது!

செவ்வாய் 19, மார்ச் 2024 8:17:29 AM (IST)

Sponsored Ads






Arputham Hospital




Thoothukudi Business Directory