» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இரட்டைக்கொலை வழக்கு: இன்ஸ்பெக்டருக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. தரப்பில் எதிர்ப்பு

செவ்வாய் 5, ஏப்ரல் 2022 12:40:35 PM (IST)

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டருக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டனர். இதில் அவர்கள் இருவரும் படுகாயம் அடைந்து பரிதாபமாக அடுத்தடுத்து இறந்தனர். இந்த இரட்டைக்கொலை சம்பவம் குறித்து சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

இதுதொடர்பாக சாத்தான்குளம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீஸ்காரர்கள் என 9 பேரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். ஏற்கனவே இவர்கள் தங்களுக்கு ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த பல்வேறு மனுக்கள் தள்ளுபடி ஆகின. இந்த இரட்டை கொலை வழக்கானது மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. 

இந்தநிலையில் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், தனக்கு ஜாமீன் கோரிய வழக்கு நீதிபதி பத்மநாபன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. தரப்பில் ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர், இதேபோன்று பென்னிக்சின் தாயார் செல்வராணி தரப்பிலும் ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிட்டனர். இதனையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து

பொது ஜனம்Mar 18, 2023 - 10:09:34 AM | Posted IP 162.1*****

பொய் வழக்கு பதிய உடந்தையாக இருந்த அந்த ஆட்டோ டிரைவர் நாய்... மற்றும் போலி மருத்துவ சான்றிதல் கொடுத்த வெண்ணிலா... ஜெயிலில் அனுமதித்த நபர்... விசாரணை செய்த மாஜிஸ்ட்ரேட்... உள்ளிட்ட அனைவரும் குற்றவாளிகளே... அவர்களையும் தண்டிக்க வேணும்... இல்லையேல் இந்த வழக்கு வெறும் கண்துடைப்புதான்...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory