» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஒன்றிய அரசு என்று கூறிய மாவட்ட ஆட்சியருக்கு பாஜக கண்டனம்!!

ஞாயிறு 28, நவம்பர் 2021 2:21:57 PM (IST)



மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு  பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி பாரதிய ஜனதா கட்சி ஒபிசி அணி சார்பில்  தமிழ் சாலையில் காமராஜர் காய்கனி மார்க்கெட்  எதிர்புறம் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் வைத்து இன்று செய்தியாளர்களை சந்தி்த்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில ஒபிசி பிரிவு விவேகம் ரமேஷ் கூறியதாவது : தமிழக அரசு பெட்ரோல் டீசல் விலை குறைக்க வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வருகின்ற 30.11.2021 மனித சங்கிலி போராட்டம் நடத்த இருக்கின்றோம்.

ஸ்டாலின் அவர்கள் திமுக ஆட்சிக்கு வந்த உடன் பெட்ரோல் டீசல் விலை குறைப்பதாக சொன்ன திமுக அரசு தற்போது விலை குறைப்பதற்கு பல காரணங்களை தெரிவிக்கின்றன. பக்கத்து மாநிலமான புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 5000 வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் தமிழக அரசு மக்களுக்கு இதுவரை தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள எந்த திட்டங்களையும் சரியாக நடைமுறை படுத்தவில்லை என்று தெரிவித்தார்.

தூத்துக்குடி பாஜக மாவட்ட தலைவர் பால்ராஜ் கூறுகையில் :- இந்தியாவில் உள்ள 25  மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலையின் வாட் வரியை குறைத்து விட்டார்கள். ஆனால் தமிழக அரசானது இது வரை வாட் வரியை குறைக்காமல் இருப்பது அவர்களின் மெத்தனபோக்கை காட்டுகிறது. மத்திய அரசானது மக்களுக்கு தீபாவளி பரிசாக பெட்ரோல் டீசல் விலையை ரூபாய் 9 வரை குறைத்து உள்ளது. தமிழக அரசு இதுவரை எந்த விலை குறைப்பும் செய்யாமல் இருப்பதை கண்டித்து மாபெரும் மனித சங்கிலி நடைபெற இருக்கிறது.

இந்திய இறையாண்மைக்கு கட்டுப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் திமுக மாவட்ட செயலாளர் போல் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று பேசி இருப்பதை தூத்துக்குடி பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது என்றார். பேட்டியின் போது அமைப்பு சாரா மாநில செயலாளர் தேவக்குமார்,  வடக்கு மாவட்ட ஒபிசி அணி தலைவர் வெங்கடேஷ், மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். 


மக்கள் கருத்து

kumarNov 28, 2021 - 07:48:29 PM | Posted IP 173.2*****

mavatta atchiyar unmayaga ondriya arasu endru kooriirukkum patchathil athu vanmayaga kandikkathakkathu.

samiNov 28, 2021 - 02:43:55 PM | Posted IP 173.2*****

"மாவட்ட ஆட்சித் தலைவர் திமுக மாவட்ட செயலாளர் போல் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று பேசி" - very big jolt from central government is waiting sir

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory