» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சரக்கு வாகனத்தில் கடத்திய ரூ.6 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் - 4பேர் கைது!

சனி 27, நவம்பர் 2021 5:04:06 PM (IST)



திருச்செந்தூரில் சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 4பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருள் மற்றும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் போன்றவற்றில் ஈடுபடுபவர்களை கைது செய்து அவற்றை பறிமுதல் செய்வதற்கும், அவற்றை தடுப்பதற்கும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தூத்துக்குடி மாவட்டத்தில் அந்தந்த உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் உதவி காவல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் பல்வேறு தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில் திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் மேற்பார்வையில் திருச்செந்தூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் முரளிதரன் அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் சுந்தரம், திருச்செந்தூர் போக்குவரத்து பிரிவு தலைமை காவலர் ராஜ்குமார், திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய தலைமை காவலர் இசக்கியப்பன் மற்றும் ஆறுமுகநேரி காவல் நிலைய தலைமை காவலர் சொர்ணராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் மார்க்கெட் ரோடு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்ததில், அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ.6 லட்சம் மதிப்பிலான 1300 கிலோ புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வேனில் இருந்த ராமையன்பட்டி, திருநெல்வேலி சண்முகம் மகன் இசக்கி ராஜா (32), நாங்குநேரி, ராஜகோபாலபுரம் பிச்சைபழம் மகன் கதிரேசன் (25), திருநெல்வேலி சங்கர் நகர், பரமசிவன் மகன் பிரபாகரன் (35), கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர், கல்யாணம் மகன் பிரசாந்த் (25), ஆகிய 4பேரையும் போலீசார் கைது செய்தனர். 

புகையிலை பொருட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்து திருச்செந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டு இதுவரை போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 17பேர் உட்பட 174 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory