» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கனிம வள இழப்பீடு கணக்கெடுப்பு வழக்கு: தமிழக தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

சனி 25, செப்டம்பர் 2021 8:36:25 AM (IST)

ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம் ஆகிய பகுதிகளில் 2018 ஆம் ஆண்டு முதல் ஆய்வு நடத்தி கனிமவள இழப்பீடு தொடர்பாக கணக்கெடுக்கக் கோரிய வழக்கில் தமிழக தலைமைச் செயலர், தமிழக கனிமவளத் துறை இயக்குனர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ராமசுப்பு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், நெல்லை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், தமிழக சுற்றுலா மேம்பாட்டுத் துறையின் இயக்குனர் சந்திப் நந்தூரி ஐஏஎஸ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் இணைந்து,48,30933 கியூபிக் மீட்டர் கிராவல் மண், செம்மண், செம்மணல் போன்றவற்றை சட்டவிரோதமாக எடுத்துள்ளனர். திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் சாத்தான்குளம் தாலுகாக்களிலிருந்தும் 2018 ஆம் ஆண்டு முதல் இதுபோல மணல் கொள்ளை நடைபெற்று உள்ளது. 

அரசு அலுவலர்கள் பல தனியார் ஒப்பந்ததாரர்கள் உடன் இணைந்து கொண்டு முறையான சுற்றுச்சூழல் தடையில்லா சான்று போன்றவை ஏதுமின்றி சட்டவிரோதமாக குவாரி நடத்தியுள்ளனர்.  இந்த முறைகேடு குறித்து நடவடிக்கை கோரி மனு அளித்த நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம் ஆகிய பகுதிகளில் ஆய்வு நடத்தி கனிமவள இழப்பீடு தொடர்பாக கணக்கெடுக்கவும், முறைகேட்டில் ஈடுபட்ட மற்றும் உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் அமர்வு முன்பாக வியாழனன்று விசாரணைக்கு வந்தது. னுதாரர் தரப்பில்," அரசு அலுவலர்களின்  உதவியுடன் சட்டவிரோதமாக மணல் கொள்ளை நடைபெற்றுள்ளது.  ஆகவே முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என வாதிடப்பட்டது.

அரசு தரப்பில், "தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மனுதாரரின் புகார் தொடர்பாக ஆய்வு செய்தார். மனுதாரர் கூறும் புகாருக்கான சாட்சியங்கள் ஏதுமில்லை" என தெரிவிக்கப்பட்டது. இவற்றை பதிவு செய்து கொண்ட நீதிபதி இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலர், தமிழக கனிமவளத் துறை இயக்குனர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory