» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருமண்டல தேர்தல்: பேராயரிடம் தொழிலதிபர் ஆசி!

சனி 31, ஜூலை 2021 5:16:55 PM (IST)


தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் லே செயலாளர் பதவிக்கு போட்டியிடும் தொழிலதிபர் டிஎஸ்எப் கிப்ட்சன், பேராயர் தேவசகாயத்தை நேரில் சந்தித்து  ஆசிர்வாதம் பெற்றார்.

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல முதற்கட்ட தேர்தல் ஆகஸ்டு 15 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் சபை பிரதிநிதிகள் மற்றும் திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். இரண்டாவது கட்டமாக ஆகஸ்டு 28 ஆம் தேதி சேகர மன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் சேகர செயலாளர், பொருளாளர் மற்றும் சபைமன்ற பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

மூன்றாவது கட்டமாக செப் டம்பர் 18ஆம் தேதி சபைமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் திருமண்டலத்திற்கு சபை மன்றத்திலிருந்து ஊழியர் பிரதிநிதிகள், மற்றும் நிலைவரக் குழுவிற்கான பிரதிநிதிகள் தேர்தல் நடக்கிறது. இறுதிக்கட்டமாக அக்டோபர் 20, 21 ஆகிய தேதிகளில் திருமண்டல பெருமன்றம் கூடி அலுவலக பிரதிநிதிகளான உபதலைவர், குருத்துவச் செயலர்,லே செயலர் திருமண்டல பொருளாளர் மற்றும் திருமண்டல கல்வி நிலைவரக் குழு செயலர் மற்றும் பல்வேறு பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில், தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் லே செயலாளர் பதவிக்கு போட்டியிடும் தூத்துக்குடி தொழிலதிபர் டிஎஸ்எப் கிப்ட்சன், பேராயர் தேவசகாயத்தை நேரில் சந்தித்து  ஆசிர்வாதம் பெற்றார். வட்ட கோவில் ஜான்சன், செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், டிஎஸ்எப் பிரேம், பேட்ரிக்ஸ் இன்ஸ்ட்டீன், திரவியபுரம் ஜெபக்குமார், வட்ட கோவில் எபனேசர், ஸ்டேன்லி மில்லர்புரம் கனகராஜ் மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Black Forest CakesThoothukudi Business Directory