» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண்ணை கொல்ல முயற்சி: விமான நிறுவன அதிகாரி கைது!

சனி 31, ஜூலை 2021 11:03:07 AM (IST)

தூத்துக்குடியில் காரில் இருந்து பெண்ணை கீழே தள்ளிவிட்டு கொலை செய்ய முயன்றதாக விமான நிறுவன அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி பி அன் டி காலனி 3வது தெருவைச் சேர்ந்தவர் சிவபெருமாள் மகன் சுரேஷ் (38), இன்டிகோ விமான நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலைபார்த்து வருகிறார். இவருக்கும் தத்துக்குடி அருகேயுள்ள கீழ கூட்டுடன்காடு கிராமம், அய்யனார் காலனியைச் சேர்ந்த பொன் மணிகண்டன் மனைவி பொன்இசக்கி (29), என்பவருக்கும் பழக்கம் இருந்துள்ளது. 

இந்நிலையில், நேற்று சுரேஷ், பொன் இசக்கியை காரில் அழைத்துச் சென்றுள்ளார். அகரம் என்ற இடத்தில் கார் சென்று கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சுரேஷ், பொன் இசக்கியை தாக்கி காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து பொன் இசக்கி முறப்பநாடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் கொலை முயற்சி வழக்குப் பதிந்து சுரேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Nalam PasumaiyagamBlack Forest CakesThoothukudi Business Directory