» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உலக நட்பு தினம் : எம்.ஜி.ஆர் ரசிகர் பேரவை சார்பில் நலதிட்ட உதவிகள் வழங்கல்!

வெள்ளி 30, ஜூலை 2021 4:13:22 PM (IST)தூத்துக்குடியில் உலக நட்பு தினத்தை முன்னிட்டு மாநகர எம்.ஜி.ஆர் ரசிகர் பேரவை சார்பில்  100 பேருக்கு 5 கிலோ அரிசி, காய்கறி தொகுப்புகள் வழங்கப்பட்டது. 

தூத்துக்குடி மாநகர எம்.ஜி,ஆர்.ரசிகர் பேரவை சார்பில் உலக நட்பு தினவிழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தூத்துக்குடி கெளரிசங்கர் ஹோட்டல் மீட்டிங் ஹாலில் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் சத்யா இலட்சுமணன் தலைமையில் நடந்தது. அ.தி.மு.க. மூத்த வழக்கறிஞர் செங்குட்டுவன் முன்னிலை வகித்தார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவருமான ஆர்.சுதாகர் கலந்து கொண்டு 100 பேருக்கு 5 கிலோ அரிசி, காய்கறி தொகுப்புகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் கே.மிக்கேல், மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் கல்வி குமார், மாவட்ட வழக்கறிஞர் அணி இணை செயலாளர் முனியசாமி, மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி துணைச் செயலாளர் பொன்னம்பலம், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைத் தலைவர் பி.சி.மணி, எம்.ஜி.ஆர் ரசிகர்கள் நெப்போலியன், என்.ராமகிருஷ்ணன், இரா.குமாரவேல், பொஜனார்த்தன பாண்டி, அரிகரன், மற்றும் சுந்தர் சிங், கே.சேரந்தையன், பரமசிவன், உட்பட பலர் கலந்துகொண்டனர். நிறைவாக முருகன் நன்றி கூறினார்.  இதற்கான ஏற்பாடுகளை சத்யா இலட்சுமணன், பொன்னம்பலம், கே.சேரந்தையன் செய்து இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Nalam PasumaiyagamBlack Forest CakesThoothukudi Business Directory