» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து நூதன போராட்டம்

புதன் 28, ஜூலை 2021 5:44:55 PM (IST)



தூத்துக்குடியில் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாதர் சங்கம் சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி தபால் தந்தி காலனி மேற்கு பகுதியில் உள்ள 5 தெருக்களில் பல ஆண்டுகளாக தார்சாலை அமைக்கப்படாமல் உள்ளது. தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், அப்பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாதர் சங்கம் சார்பில் சாலையில் நெல் குத்தும் போராட்டம் நடைபெற்றது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிளை தலைவர் கார்த்திக் தலைமை தாங்கினார். மாதர் சங்கம் கமலம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் முத்து கலந்து கொண்டு கண்டன உரையாற்றிானர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் குண்டும் குழியுமாக உள்ள பகுதிகளில் நெல் குத்தி மாநகராட்சியை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் விக்னேஷ், கிஷோர், மணி, தாம்சன், இசக்கி, கற்பககனி, காந்திமதி, வினோகலன், பிரேமா, சித்திரைபுஷ்பம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory