» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பக்தர்கள் பங்கேற்பின்றி பனிமய மாதா ஆலய திருவிழா : ஆலோசனை கூட்டத்தில் அறிவிப்பு!

வியாழன் 22, ஜூலை 2021 3:39:06 PM (IST)தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா தொடர்பான ஆலோசனைக்கூட்டம்  சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் தலைமையில் இன்று நடைபெற்றது

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் தலைமையில் இன்று (22.07.2021) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஐ, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், பிஷப் ஸ்டீபன் அந்தோணி, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் மற்றும் ஆலய கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் பெ.கீதாஜீவன் தெரிவித்ததாவது: நம்முடைய மேதகு ஆயர் நமது தூத்துக்குடி நகரில் அமையபெற்றுள்ள தமிழகத்தில் உள்ள 4 பெசிலிக்காவில் ஒரு பெசிலிக்காக இருக்கக்கூடிய பனிமய மாதா ஆலயத்துடைய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 5ம் தேதி சிறப்பாக உலக அளவில் பக்தர்கள் அதிக அளவில் கலந்துகொள்வார்கள். கொடியேற்றம் அன்று லட்சக்கணக்கானோர்கள் கலந்துகொள்வார்கள். கரோனா தொற்றில் இருந்து இந்த திருவிழா நடத்தாத நிலையில் இருந்து இந்த ஆண்டு ஊரடங்காக இருப்பதால் ஆலயங்களில் ஒருசில தளர்வுகள் வழங்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. 

அதனால் இத்திருவிழாவில் முறைப்படி எல்லா ஆராதனைகளும் நடைபெறும். ஆனால் மக்கள் பங்கேற்பின்றி நடைபெறும். சப்பர பவனி உள்ளிட்டவைகள் நடைபெறாது. மக்கள் பங்கேற்பின்றி கொடியேற்றம் உள்ளிட்ட எல்லா நிகழ்வுகளும் நடைபெறும். இந்நிகழ்வுகள் அனைத்தும் உள்ளுர் தொலைக்காட்சி மற்றும் யூடியுப் சேனல்கள் மூலம் நான் அனைவரும் நேரயாக ஆராதனைகளில் பங்பேற்று கொள்ளலாம் என ஆயர் அறிவித்துள்ளார்கள். நமது அரசம் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. மக்கள் அனைவரும் பனிமய மாதா அன்னையை வணங்கலாம், தரிசிக்கலாம், ஆனால் திருவிழா நிகழ்வுகள் மக்கள் பங்கேற்பின்றி நடைபெறும் என தெரிவித்தார்.

பின்னர் திருவிழா நடத்துவது தொடர்பாக பிஷப் ஸ்டீபன் அந்தோணி தெரிவித்ததாவது: தூய பனிமய மாதா பேராலய திருவிழா இந்த ஆண்டு 26.07.2021 திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன் பனிமய தாயின் திருவிழா தொடங்கி 05.08.2021 வியாழன் அன்று நிறைவு பெறும். இந்த ஆண்டு திருவிழாவில் கொரோனா ஊரடங்கின் காரணமாக அரசின் அறிவுறுத்தலின்படி இந்த ஆண்டு கொடி பவனி, நற்கருணை பவனி, சப்பர பவனி ஆகியவை நடைபெறாது. திருவிழா நாட்களில் வழக்கமாக பேராயலத்தின் அனுமதியோடு நடத்தப்படும் கடைகளும், பொருட்காட்சியும் இந்த ஆண்டு நடத்தபடாது. 

26.7.2021 திங்கட்கிழமை அன்று காலை கொடியேற்ற வைபவம் மக்கள் பங்கேற்பு இன்றியே நடைபெறும். அடுத்த 10 நாட்களும் பேராலயத்தின் உள்ளே வழக்கமாக காலையில் நடைபெறும் திருப்பயண திருப்பலிகள், மாலையில் நடைபெறும் அருள் உரை, அருள் இரக்க ஆசீர், இரவில் நடைபெறும் நற்கருணை ஆசிர் ஆகியன மக்கள் பங்கேற்பு இன்றி நடைபெறும். வருகின்ற மக்களும் முககவசம், சமூக இடைவெளியை பின்பற்றி நடைபெறும். மக்கள் பங்கேற்கும் நோக்குடன் வரும்பொழுது காலை திருப்பயண திருப்பலிகளில் பங்கேற்கும் மக்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. பேராலயத்தில் வழிபாடுகள் நடத்தப்படாத நேரத்தில் பேரலாயம் திறந்தே இருக்கும். மக்கள் அரசின் கட்டளைககுள்கு உட்பட்டு தனித்தனியாக வந்து தங்களது வழிபாட்டினை நடத்திக்கொள்ளலாம். 

பெருவிழாவின் முக்கியமான நினைவுகள் அனைத்தும் சூரியா தொலைக்காட்சி, அற்புதம் ஏசு தொலைக்காட்சி, விண்மீன் மியுசிக் தொலைக்காட்சி, கொற்கை தொலைக்காட்சி, சுனோஸ் பசுபிகா யூடியுப் சேனல் ஆகியவற்றின் நேரலையில் ஒளிபரப்பப்படும். எனவே இந்த ஆண்டு தமிழக அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி பனிமய தாயின் பெருவிழாவை கொண்டாட வேண்டும் எனவும், பெரும்பாலான நிகழ்வுகள் தொலைக்காட்சி வாயிலாகவே திருப்பலியில் பங்கேற்று பயன்பெற உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார். கூட்டத்தில் தூய பனிமய மாதா ஆலய பங்குதந்தை குமாரராஜா, கோவில் கமிட்டி உப தலைவர் அர்ட்லி, செயலாளர் கென்னடி, பொருளாளர் ஜாகீர்கோச் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து

ராஜாJul 23, 2021 - 04:18:52 PM | Posted IP 173.2*****

good decision

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Black Forest Cakes
Thoothukudi Business Directory