» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திமுகவில் இணைந்த ஊராட்சி ஒன்றியக்குழு தலைவரை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!

செவ்வாய் 22, ஜூன் 2021 3:06:08 PM (IST)கோவில்பட்டியில் அதிமுகவில் இருந்த விலகி திமுகவில் இணைந்த ஊராட்சி ஒன்றியக்குழு தலைவரை  கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவரான கஸ்தூரி, மற்றும் அவரது கணவர் சுப்புராஜ் ஆகிய இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். இந்நிலையில், அவர்கள் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்ததை கண்டித்தும், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் கோவில்பட்டி இனாம்மணியாச்சி பஸ் நிறுத்தம் அருகே அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அதிமுக நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரைப் பாண்டியன் ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ.சின்னப்பன் ஆர்ப்பாட்டத்தினை தொடங்கி வைத்தார். இதில்  ஒன்றிய செயலாளர்கள் வினோபாஜி, வண்டானம் கருப்பசாமி, மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் செல்வக்குமார், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் பழனிச்சாமி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் துறையூர் கணேசன், அதிமுக நிர்வாகிகள் ராமசந்திரன், ராமர், வேலுமணி, ஜெமனி(எ)அருணச்சாலசாமி, செண்பகமூர்த்தி, ஆபிரகாம் அய்யாத்துரை, நீலகண்டன், பாலமுருகன், பழனிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam

Black Forest Cakes


Thoothukudi Business Directory