» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்

சனி 19, ஜூன் 2021 3:52:28 PM (IST)

தூத்துக்குடியில் குடும்பத் தகராறில் மனைவி பிரிந்து சென்றதால், மனவேதனையில் வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி, மாப்பிள்ளையூரணி, பாரதி நகர் 5வது தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் வீரராஜ் (25), இவரது மனைவி கெளசல்யா. இந்த தம்பதியருக்கு திருமணமாகி ஒரு வருடமாகிறது. இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன் நடந்த குடும்பத் தகராறில் மனைவி அவரை விட்டு பிரிந்து அவரது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டாராம். இதனால் மனவேதனையடைந்த வீரராஜ் தனது வீட்டில், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes


Nalam Pasumaiyagam

Thoothukudi Business Directory