» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கலப்பட கருப்புக்கட்டி தயாரிப்பதற்காக பதுக்கிய ரூ.23¼ லட்சம் மதிப்புள்ள வெள்ளை சர்க்கரை பறிமுதல்

வெள்ளி 18, ஜூன் 2021 8:26:59 AM (IST)



உடன்குடியில் கலப்பட கருப்புக்கட்டி, பனங்கற்கண்டு தயாரிப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்ட ரூ.23¼ லட்சம் மதிப்புள்ள வெள்ளை சர்க்கரை பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் கலப்பட கருப்புக்கட்டி மற்றும் பனங்கற்கண்டு தயாரிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் செந்தில்குமார், மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் ஆகியோர் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில் அலுவலர்கள் உடன்குடி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கருப்புக்கட்டி மற்றும் பனங்கற்கண்டு தயாரிப்பு ஆலைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, 5 ஆலைகளிலும் கலப்படத்துக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 1,340 மூட்டைகளில் இருந்த 67 டன் வெள்ளை சர்க்கரையை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். அதற்கு உரிய ஆணைகளை உரிமையாளர்களிடம் வழங்கினர். அதன் மதிப்பு சுமார் ரூ.23 லட்சத்து 25 ஆயிரம் என்று கூறப்படுகிறது.

மேலும், இவர்களுக்கு வெள்ளை சர்க்கரை வினியோகம் செய்த உடன்குடியில் உள்ள ஒரு மொத்த விற்பனை நிறுவனத்திலும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.அந்த நிறுவனம் உணவு பாதுகாப்புத்துறையின் உரிமம் இன்றி செயல்பட்டதும், அங்கு உரிய ரசீதுகள் இல்லாமல் கலப்படத்துக்கு வினியோகம் செய்வதற்காக சுகாதாரமற்ற முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 505 மூட்டையில் இருந்த 25 டன் வெள்ளை சர்க்கரையும் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு சுமார் ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.

சம்பந்தப்பட்ட ஆலைகள் மற்றும் சர்க்கரை விற்பனை நிறுவனம் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதேபோல் கருப்புக்கட்டி மற்றும் பனங்கற்கண்டு உற்பத்தியாளர்கள் வெள்ளை சக்கரையை கலப்படத்துக்கு மீண்டும் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, இரட்டிப்பு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

3-வது முறையாக கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டு ஆலைகளில் வெள்ளை சர்க்கரை பறிமுதல் செய்யப்பட்டால், அந்த நிறுவனங்களது உரிமங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கருப்புக்கட்டி மற்றும் பனங்கற்கண்டு தாயாரிப்பாளர்களுக்கு வெள்ளை சர்க்கரை விற்பனை செய்யும் சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் தெரிவித்து உள்ளார்.


மக்கள் கருத்து

சாமான்யன்Jun 18, 2021 - 02:49:48 PM | Posted IP 108.1*****

அது என்ன சம்பந்தப்பட்ட ஆலைகள்? பெயரைப் போடுயா! மக்கள் தெரியட்டும்.

RAJtutJun 18, 2021 - 10:55:52 AM | Posted IP 162.1*****

appo 3 times varai kalapadam panikalam

storeJun 18, 2021 - 10:29:55 AM | Posted IP 173.2*****

pala store kalil kalappada porulkal athigam virkapadukirathu.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory