» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மளிகை தொகுப்பு வழங்காமல் அலைக்கழிப்பு : தூத்துக்குடியில் பொதுமக்கள் புகார்

வியாழன் 17, ஜூன் 2021 10:47:15 AM (IST)

தூத்துக்குடி ரேசன் கடைகளில் தமிழக அரசு அறிவித்துள்ள மளிகை பொருட்களை வழங்காமல் அலைக்கழிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

தமிழ்நாட்டில் கரோனா ஊரடங்கு நிவாரண உதவித் தொகையாக 2வது தவனை 2 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம், மற்றும் 14 வகையான மளிகை பொருட்களுக்கான டோக்கன் ரேஷன் கடை ஊழியர்களால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை கடந்த 3ம் தேதி தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதற்றாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு மளிகை பொருட்கள் வழங்கப்படுகிறது. 

இந்நிலையில், தூத்துக்குடி புதுக்கிராம் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் டோக்கன் வழங்கப்பட்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மளிகைப் பொருட்களின் தொகுப்பு வழங்காமல் இன்று, நாளை என்று கடை ஊழியர்கள் அலைக்கழிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுபோல் அமுதம், கூட்டுறவு அங்காடிகளில் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாக கூறப்படுகிறது தமிழக அரசு மளிகைப் பொருட்களை ஒதுக்கீடு செய்தும், ரேஷன் கடை ஊழியர்கள் அதனை வழங்காமல் இருப்பதற்கு காரணம் என்ன என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து

பொது ஜனம்Jun 18, 2021 - 06:07:57 PM | Posted IP 108.1*****

உண்மை. நடவடிக்கை அவசியம். நல்லாட்சி என கூவும் திமுக தலைங்க கவனிக்கவேண்டும்

makkalJun 18, 2021 - 06:05:11 PM | Posted IP 108.1*****

true, distribution problem need to be solved or action to be taken on ration shop employees. Date possible to provide should be mentioned in noticeboard.

kootampuliJun 17, 2021 - 02:50:41 PM | Posted IP 108.1*****

please consider and give the case at kootampuli rezen shop. குடும்ப அட்டைதாரர்களுக்கு மளிகைப் பொருட்களின் தொகுப்பு வழங்காமல் இன்று, நாளை என்று கடை ஊழியர்கள் அலைக்கழிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கூட்டுறவு அங்காடிகளில் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாக கூறப்படுகிறது தமிழக அரசு மளிகைப் பொருட்களை ஒதுக்கீடு செய்தும், ரேஷன் கடை ஊழியர்கள் அதனை வழங்காமல் இருப்பதற்கு காரணம் என்ன என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory