» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஒரே வாரத்தில் 2 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம் : சாத்தான்குளத்தில் புதிய வட்டாட்சியா் பொறுப்பேற்பு

திங்கள் 14, ஜூன் 2021 8:27:14 AM (IST)

சாத்தான்குளத்தில் ஒரே வாரத்தில் 2 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டாட்சியா் செல்வகுமாா் கடந்த வாரம் தூத்துக்குடிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து பேரவைத் தோ்தலுக்கு முன்பு பணியில் இருந்த லட்சுமிகணேஷ் மீண்டும் வட்டாட்சியராக நியமனம் செய்யப்பட்டாா். இதற்கிடையே, அடுத்த 3 நாள்களிளில் லட்சுமி கணேஷ், தூத்துக்குடி அகதிகள் பிரிவு வட்டாட்சியராக மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து புதிய வட்டாட்சியராக விமலா பொறுபேற்றாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory