» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாமனாரை கத்தியால் வெட்டிய மருமகளுக்கு போலீஸ் வலைவீச்சு

புதன் 5, மே 2021 8:50:02 AM (IST)

ஆத்தூர் அருகே மாமனாரை கத்தியால் வெட்டியதாக மருமகள் மீது  போலீசார் வழக்குப் பதிந்து அவரை தேடிவருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகேயுள்ள முக்காணி மேலூர் சந்தனமாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (63). இவரது மகன் மாரிச்செல்வம். இவருடைய மனைவி ராணி. இவர்களுக்கு இரண்டு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மாரி செல்வமும் ராணியும் சில காலமாக கணவன், மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டதில், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். 

மாரிச்செல்வம் தூத்துக்குடியில் தனியார் வழக்கறிஞர் ஒருவரிடம் உதவியாளராக வேலை பார்த்துக் கொண்டு அங்கேயே தங்கியிருந்து வருகிறார். ராணி தனது பிள்ளைகளை வைத்துக்கொண்டு மாமனாருக்கு சொந்தமான ஒரு வீட்டில் வசிக்கிறார். மற்றொரு வீட்டில் மாமனார் வசித்து வருகிறார். இருவருடைய வீட்டுக்கும் தனித்தனியே கழிவறை உள்ளது. இந்நிலையில் ராணி வீட்டார் பயன்படுத்தி வந்த கழிவறை பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் ராணியின் மகன் மாரிமுத்துவின் வீட்டுக்கு உள்ள கழிவறையைப் பயன்படுத்தியுள்ளார். 

ஆனால் சிறுவன் கழிவறையை சரியாக சுத்தம் செய்யாததை, மாரிமுத்து கண்டித்துள்ளார். இதை பார்த்த ராணி, மாரி முத்துவிடம் தகராறு செய்துள்ளார். மேலும் அங்கு கிடந்த கம்பை எடுத்து மாரிமுத்துவை சரமாரியாக தாக்கியதோடு, வீட்டு முன்பு வாழை இலை அறுப்பதற்காக வைக்கப்பட்டு இருந்த கத்தியை எடுத்து அவரது தலையில் வெட்டி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த மாரிமுத்து காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.மேலும் அவர் கொடுத்த புகாரின் பேரில் ஆத்தூர் போலீசார் ராணி மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes


Thalir Products


Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory