» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு: 204 நுண்கட்டுப்பாட்டு மண்டலங்கள் தீவிர கண்காணிப்பு

செவ்வாய் 4, மே 2021 8:50:25 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டவர்கள் உள்ள பகுதிகள் நுண் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவித்து கண்காணக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் தொடர்ந்து கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து 500-க்கும் மேற்பட்டவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கரோனா தடுப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. அதன்படி மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டவர்கள் உள்ள பகுதிகள் நுண் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

தூத்துக்குடி புறநகர் பகுதியில் 11 மண்டலமும், வல்லநாடு வட்டாரத்தில் 4 மண்டலமும், ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தில் 22 மண்டலமும், ஆழ்வார்திருநகரி வட்டாரத்தில் 4 மண்டலமும், திருச்செந்தூர் வட்டாரத்தில் 2 மண்டலமும், உடன்குடி வட்டாரத்தில் ஒரு மண்டலமும், சாத்தான்குளம் வட்டாரத்தில் 9 மண்டலமும், கோவில்பட்டி வட்டாரத்தில் 89 மண்டலமும், ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் 13 மண்டலமும், புதூர் வட்டாரத்தில் 6 மண்டலமும், கயத்தார் வட்டாரத்தில் 31 மண்டலமும், விளாத்திகுளம் வட்டாரத்தில் 12 மண்டலமும் ஆக மொத்தம் 204 மண்டலங்களாக அறிவித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த பகுதியில் சுகாதார பணியாளர்கள் கிருமி நாசினி தெளிப்பது, கபசுர குடிநீர் வழங்குவது மற்றும் காய்ச்சல் முகாம்கள் நடத்துவது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து நோய் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thalir Products

Nalam PasumaiyagamBlack Forest CakesThoothukudi Business Directory