» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பாகிஸ்தானின் அணுசக்தி திட்டத்தின் நோக்கம் அமைதியை நோக்கியது : ஷெபாஸ் ஷெரீப்
ஞாயிறு 13, ஜூலை 2025 6:51:16 PM (IST)
பாகிஸ்தானின் அணுசக்தி திட்டம் முற்றிலும் தேசத்தின் தற்காப்பு ரீதியான நடவடிக்கையை சார்ந்தது. அதன் நோக்கம் அமைதியை நோக்கியது என்று பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசினார்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலை அடுத்து இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் இருந்த தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்தது. தொடர்ந்து பாகிஸ்தான் தரப்பில் இருந்து எல்லையோர இந்திய மாநிலங்கள் குறிவைக்கப்பட்டன. அந்த தாக்குதலை இந்திய ராணுவம் இடைமறித்து அழித்தது. பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுத்தது.இந்நிலையில், இந்த மோதல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சனிக்கிழமை அன்று மாணவர்களுடன் இஸ்லாமாபாத் நகரில் உரையாடினார். அப்போது, இந்தியா உடனான நான்கு நாள் நீடித்த அண்மைய மோதலை அவர் நினைவுகூர்ந்தார்.
"நமது அணுசக்தி திட்டம் முற்றிலும் தேசத்தின் தற்காப்பு ரீதியான நடவடிக்கையை சார்ந்தது. அதன் நோக்கம் அமைதியை நோக்கியது. தாக்குதல் நடத்த அல்ல. இந்தியா உடனான மோதலில் 55 பேர் உயிரிழந்தனர். இந்தியாவின் தாக்குதலுக்கு நாம் பதிலடி கொடுத்தோம்” என ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
இந்தியாவும் அணுசக்தி பலம் படைத்த நாடு என்பதால் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதல் உலக நாடுகளை வருந்தச் செய்தது. இந்நிலையில், இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் மோதலை முடிவுக்கு கொண்டு வந்தன. போரை தாமே முடிவுக்குக் கொண்டுவந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்காவை இனி நம்ப முடியாது! - ஐரோப்பா தனி ராணுவம் அமைக்க ஜெலன்ஸ்கி அழைப்பு!
சனி 11, ஏப்ரல் 2026 5:32:39 PM (IST)

இஸ்ரேல் ஒரு தீய நாடு; மனிதகுலத்திற்கே சாபக்கேடு : பாகிஸ்தான் அமைச்சர் கருத்தால் சர்ச்சை!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 12:06:44 PM (IST)

உடன்பாடு எட்டப்படாவிட்டால் இதுவரை கண்டிராத தாக்குதல்: ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை!
வியாழன் 9, ஏப்ரல் 2026 12:48:45 PM (IST)

அமெரிக்காவுக்கு எதிரான போரில் வரலாற்று வெற்றி: ஈரான் அரசு அறிக்கை!
புதன் 8, ஏப்ரல் 2026 10:19:15 AM (IST)

இருவார போர் நிறுத்தத்திற்கு ட்ரம்ப் அழைப்பு: ஈரான் ஒப்புதல் - ஹார்முஸ் நீரிணை திறக்க முடிவு!
புதன் 8, ஏப்ரல் 2026 10:17:54 AM (IST)

தற்காலிக போர்நிறுத்த நடவடிக்கைக்காக ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க முடியாது: ஈரான் திட்டவட்டம்
திங்கள் 6, ஏப்ரல் 2026 5:34:47 PM (IST)







