» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பிரதமர் மோடிக்கு கார் ஓட்டிய ஜோர்டான் இளவரசர்!

செவ்வாய் 16, டிசம்பர் 2025 4:03:51 PM (IST)



பிரதமர் நரேந்திர மோடி சென்ற காரை ஜோர்டான் நாட்டின் பட்டத்து இளவரசர் அல்-ஹுசைன் பின் அப்துல்லா II ஓட்டிச் சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றது.

ஜோா்டான் நாட்டுக்கு இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை சென்றடைந்தாா். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இரு நாடுகள் இடையே ராஜீய உறவுகள் ஏற்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு பிரதமா் மோடி மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் முதல் நாளான நேற்று, ஜோா்டான் மன்னா் அப்துல்லா பின் அல் ஹுசைனை சந்தித்து, இரு நாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில், இரண்டாம் நாளான இன்று, ஜோர்டான் இளவரசருடன் வரலாற்றுச் சிறப்புமிக்க பெட்ரோ நகரைப் பிரதமர் மோடி பார்வையிட்டார். அப்போது, ஜோர்டான் அருங்காட்சியத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணித்த காரை அந்நாட்டின் இளவரசர் அல்-ஹுசைன் பின் அப்துல்லா II ஓட்டினார்.

இதுதொடர்பான புகைப்படங்களை பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இருநாள் பயணத்தை முடித்துக்கொண்டு எத்தியோப்பியா நாட்டுக்கு புறப்பட்ட பிரதமர் மோடியை விமான நிலையத்துக்குச் சென்று அந்நாட்டு இளவரசர் வழியனுப்பினார்.


மக்கள் கருத்து

உண்மDec 16, 2025 - 06:34:50 PM | Posted IP 162.1*****

இங்கு மதம்மாறிய பச்சை சங்கிகள் கதறல்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education

Arputham Hospital





Thoothukudi Business Directory