» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பிரிக்ஸ் நாடுகள் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும் : அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!

புதன் 9, ஜூலை 2025 12:42:07 PM (IST)

டாலருக்கு சவால் காட்ட முயலும் பிரிக்ஸ் நாடுகள் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பிரிக்ஸ் கூட்டமைப்பின் 17-வது உச்சி மாநாடு பிரேஸிலில் நடந்தது. பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நிறுவன நாடுகள் முதன்மை உறுப்பினர்களாக இருந்த பிரிக்ஸ் கூட்டமைப்பில் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகியவை இணைந்துள்ளன.

மொத்த உலகளாவிய உற்பத்தியில் 39 சதவிகிதத்தை கொண்டுள்ள பிரிக்ஸ் நாடுகள் இணைந்து டாலருக்குப் போட்டியாக பிரிக்ஸ் கரன்சியை வெளியிடுவது பற்றி 2023 ஆம் ஆண்டில் சிந்தனைகள் முன்வைக்கப்பட்டன. அப்போதே அமெரிக்க அதிபர் டிரம்ப் இதற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில், பிரிக்ஸ் நாடுகள் மற்றும் அவற்றுக்கு ஆதரவான நாடுகள் விரைவில் 10 சதவிகித வரி விதிப்பை எதிர்கொள்ளப் போவதாகவும், அமெரிக்க டாலரைக் காயப்படுத்தவே, பிரிக்ஸ் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அதிபர் டிரம்ப் பேசுகையில், "டாலருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் பிரிக்ஸ் நாடுகள் (இந்தியாவும்) 10 சதவிகித வரியை எதிர்கொள்ள நேரிடும். டாலர்தான் அனைவருக்கும் ராஜா. டாலருக்கென்று ஒரு தரமிருக்கிறது.

அவர்கள் என்னிடம் விளையாட்டு காட்டுகிறார்கள். எனக்கும் விளையாட்டு காட்டத் தெரியும். டாலருக்கு சவால் காட்ட பிரிக்ஸ் நாடுகள் முயன்று வருகின்றனர். இதனால், அவர்கள் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும். அவர்கள் அந்த விலை கொடுக்கத் தயாராக இருக்கமாட்டார்கள். பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள பல நாடுகள் பிரிந்துவிட்டன. அதில், ஒன்று இரண்டு மட்டும் கூட்டாக சுற்றிக் கொண்டிருக்கின்றன” என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education




Arputham Hospital





Thoothukudi Business Directory