» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பகல்காம் தாக்குதல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: குவாட் அமைப்பு கூட்டறிக்கை

புதன் 2, ஜூலை 2025 10:56:21 AM (IST)



பகல்காம் தாக்குதல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குவாட் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. 

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய குவாட் அமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு அமெரிக்காவின் வாஷிங்டனில் நடந்தது. இதில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அமெரிக்க அமைச்சர் மார்கோ ரூபியோ, ஜப்பான் அமைச்சர் தகேஷி இவாயா, ஆஸ்தி ரேலிய அமைச்சர் பென்னி வோங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில், "பகல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். இந்தக் கண்டிக்கத்தக்க செயலுக்குக் காரணமானவர்கள், ஏற்பாட்டாளர்கள் மற்றும் நிதியுதவி செய்தவர்கள் மீது எந்த தாமதமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அனைத்து ஐ.நா. உறுப்பு நாடுகளும் சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின் கீழ் தங்கள் கடமைகளுக்கு இணங்க, இந்த விஷயத்தில் அனைத்து தொடர்புடைய அதிகாரிகளுடனும் தீவிர மாக ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education


Arputham Hospital





Thoothukudi Business Directory