» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: விஞ்ஞானிகள், ராணுவ தளபதிகள் உள்பட 585 பேர் பலி!

புதன் 18, ஜூன் 2025 10:41:37 AM (IST)



ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் அணு விஞ்ஞானிகள், ராணுவ தளபதிகள் உள்பட 585 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இஸ்ரேல், ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்போக்கு நிலவி வருகிறது. இதனிடையே, கடந்த 13ம் தேதி அதிகாலை ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள், ஏவுகணை சேமிப்பு கிடங்குகள், கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் உள்பட பல்வேறு இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதை தடுக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இரு தரப்பிற்கும் இடையே தொடர்ந்து இன்று 6வது நாளாக மோதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் அணு விஞ்ஞானிகள், ராணுவ தளபதிகள் உள்பட 585 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்ட தகவல்படி, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானில் 585 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1,326 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

நல்ல செய்திJun 18, 2025 - 01:02:14 PM | Posted IP 162.1*****

1979 இல் ஈரான் ஒரு மதவெறி பிடித்த நாடாக மாறிவிட்டது, புரட்சியின் போது 60,000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர், பல வருடமாக ஹிஜாப்கு எதிராக போராடிய பல அப்பாவி வாலிப பெண்களை சுட்டு கொன்றது என்பதை மறக்க முடியாது, உலகில் எல்லா தீவிரவாதிகளுக்கு ஆயுதம் வழங்கிய நாடு தான் ஈரான். மிகச் சிறிய குட்டி நாடு இஸ்ரயேலை மிரட்டினால் இது தான் சரியான பதிலடி. உண்மையான கடவுளுக்கு எல்லாம் தெரியும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital



CSC Computer Education


New Shape Tailors




Thoothukudi Business Directory