» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்காவில் இருந்து தங்கள் சொந்த நாட்டுக்கு பணம் அனுப்பினால் 5 % வரி: டிரம்ப் அதிரடி
செவ்வாய் 20, மே 2025 12:44:14 PM (IST)
அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினர், தங்களது சொந்த நாட்டுக்கு பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக சுமார் 1.37 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் வசிப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. அவர்களை வெளியேற்ற அதிபர் டிரம்ப் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் சட்டவிரோத குடியேறிகள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக சுமார் 4.78 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் பணியாற்றி வருகின்றனர். அதிபர் டிரம்ப் பதவியேற்ற பிறகு அவர்களின் பல்வேறு உரிமைகள், சலுகைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் 'தி ஒன் பிக் பியூட்டிபூல் பில்' என்ற புதிய மசோதாவை அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் வரையறுத்து உள்ளது. இதில் வெளிநாட்டினருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள், வரிகள் விதிக்கப்பட்டு உள்ளன.
குறிப்பாக, அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினர், தங்களது சொந்த நாட்டுக்கு பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று புதிய மசோதாவில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்காரணமாக கிரீன் கார்டு மற்றும் எச்1பி, எச்2ஏ, எச்2பி விசா பெற்று அமெரிக்காவில் பணியாற்றும் சுமார் 4.78 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். ஜனாதிபதி டிரம்பின் புதிய வரி விதிப்பால் 45 லட்சம் இந்தியர்களும் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:18:42 AM (IST)

தைவானுக்கு 10 பில்லியன் டாலர் ஆயுதங்கள் விற்பனை: அமெரிக்கா அறிவிப்பு - சீனா கண்டனம்!
வியாழன் 18, டிசம்பர் 2025 5:48:17 PM (IST)

புயல் காற்றில் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை: பிரேசிலில் பரபரப்பு!
புதன் 17, டிசம்பர் 2025 11:58:56 AM (IST)

பிரதமர் மோடிக்கு கார் ஓட்டிய ஜோர்டான் இளவரசர்!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 4:03:51 PM (IST)

இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்த சட்டத்தில் ரஷ்யா அதிபர் புதின் கையெழுத்து!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 11:21:23 AM (IST)

சிட்னியில் மக்களை சுட்டுக்கொன்ற கொடூரன்: துப்பாகியை பறித்த நபருக்கு குவியும் பாராட்டு!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:55:17 AM (IST)










